அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் கூகுள் நிறுவனத்தின் ‘வேமோ’ (Waymo) என்கிற தானியங்கி கார்கள் ஓடுகின்றன . இது ஒரு டாக்சி சேவை. கார்களை ஓட்டுவது செயற்கை நுண்ணறிவைக் கொண்டு இயங்கும் கூகுளின் கணினிகள். இதில் ஓட்டுநர் கிடையாது.
இன்று சான் பிரான்சிஸ்கோ நகரில் திடீரென மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. அந்தச் சமயத்தில் நகரின் சாலைகளில் இருந்த பல நூறு வேமோ கார்கள் அப்படியே உறைந்துபோய் நின்றுவிட்டன . எங்கும் நகராமல் விளக்குச் சமிக்ஞைகளை மட்டும் ஒளிரவிட்டு நின்றன.
ஏன் இப்படி அவை உறைந்தன என்று கூகுள் இன்னும் விளக்கவில்லை. சாலைப் போக்குவரத்துச் சிக்னல்கள் இல்லாத காரணத்தால், செயற்கை நுண்ணறிவுக்குச் சாலைகளைக் கடப்பது எப்படி என்று தெரியாமல் போய், அதனால் அவை குழம்பியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இதையெல்லாம் இந்தியாவில் கொண்டுவந்தால் என்ன ஆகும்? நம்மூரில் பல சமயம் சிக்னல் வேலை செய்யாது; செய்தாலும் யாரும் அதை மதிக்க மாட்டார்கள். அப்படியே வேலை செய்தாலும் , நம்மை ஆள்பவர்கள் வந்தால் சிக்னல்கள் நிறுத்தப்படும். அந்தச் சூழ்நிலையில் எந்த ஏ.ஐ. பாச்சாவும் இங்கே பலிக்காது.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.


may be the data transfer to the service may be down due to outage so car doesn’t know how to proceed.