நண்பரும், மூத்த பத்திரிகையாளருமான திரு. மாலன் அவர்கள், பல ஆண்டுகள் உழைத்து, ஆராய்ந்து எழுதியுள்ள முக்கியமான நூல் ‘உண்மை நின்றிட வேண்டும்’. மகாகவி பாரதியாரைப் பற்றிய கட்டுக்கதைகளைத் தரவுகளோடு தகர்க்கும் நூல் இது.
இன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்துகொண்டிருக்கும் நிகழ்ச்சியில், இந்த நூலை வாங்கிப் பார்த்தபோது எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சி!

சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் மாலன் என்னை அழைத்து, ‘ஏ.ஐ. (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஓர் உதவி வேண்டும்’ என்றார். ‘பாரதியாரைப் பற்றி ஒரு நூல் எழுதுகிறேன். அதில் நான் கனவு கண்டதுபோல, பாரதியோடு நான் இருப்பது போன்ற ஒரு படத்தை ஏ.ஐ. கொண்டு உருவாக்கித் தர முடியுமா?’ என்று கேட்டார்.
கரும்பு தின்னக் கூலியா? உடனே சில மணி நேரத்தில் சில படங்களை உருவாக்கி அவருக்கு அனுப்பினேன். அவற்றிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்து நூலில் பதிப்பித்துள்ளார்.

என்ன ஓர் ஆச்சரியம்! அந்தப் படத்தின் கீழே என் பெயரைக் குறிப்பிட்டு நன்றி சொல்லியுள்ளார். ஒரு சின்னஞ்சிறு உதவிக்கு எனக்குக் கிடைத்த பெரிய பரிசு இது. என் அதிர்ஷ்டம்! இப்படியான ஒன்றைச் செய்ய மாலனுக்கு எப்பேர்ப்பட்ட பெரிய மனது வேண்டும்! அவரின் நற்பண்புக்கு நன்றி.
இதோடு நில்லாமல், இன்று என்னை மேடைக்கு அழைத்து புத்தகப் பரிசு ஒன்றையும் அளித்தார். அவருக்கு மீண்டும் நன்றி.
இந்த நூலை வாங்க Pustaka-வைத் தொடர்பு கொள்ளவும்.



Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

அருமை!! அருளாள்மை :)