ரசகுல்லா போச்சே, இண்டிகோ செய்த தரமான சம்பவம்!

இண்டிகோ… இண்டிகோ… இண்டிகோ!

கடந்த சில வாரங்களாகவே இந்திய நகரங்களில் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரே மந்திரம் இந்த விமானச் சேவை நிறுவனத்தின் பெயர்தான்.

வங்காள நண்பர் வீட்டுத் திருமணத்திற்கு இன்று கிளம்ப வேண்டியவன் நான். ஆசையாய் ஒரு மாதத்திற்கு முன்னரே குடும்பத்தோடு டிக்கெட் எடுத்திருந்தேன். இன்று கிளம்பி ஞாயிறு திரும்புவதாகத் திட்டம். பெட்டி படுக்கையெல்லாம் தயாராக வைத்துவிட்டு, காலையில் கண் விழித்துப் பார்த்தால், ‘விமானம் ரத்து’ என்று ஒரு மின்னஞ்சல் வந்து சிரித்தது. இன்று போனால் தானே ஞாயிறு திரும்ப முடியும்? கடுப்பில் முழுப் பயணத்தையும் ரத்து செய்துவிட்டோம். ஒரு பெங்காலி திருமணத்தைப் பார்த்து, ரசகுல்லாக்களையும் பெங்காலி உணவுகளையும் ஒரு கை பார்க்கும் வாய்ப்பைக் கெடுத்த இண்டிகோ மேல் பயங்கர ஏமாற்றத்தில் இருக்கிறேன்.

‘இண்டிகோ லட்சணம் ஊரறிந்த விஷயமாச்சே, போன வாரமே வேறு நிறுவனத்திற்கு மாறியிருக்கலாமே’ என்று நண்பர் வேறு என்னை இப்போது கடிந்துக் கொள்கிறார். நேற்று இரவு கூடப் பார்த்தேன்; நான் செல்ல வேண்டிய விமான எண் கடந்த ஒரு வாரமாக ரத்தாகாமல் சரியாகவே போய்க்கொண்டிருந்தது. அந்தத் தரவுகளை நம்பி ஏமாந்துவிட்டேன். இப்படிச் சமயம் பார்த்து என் காலை வாரிவிட்டது இண்டிகோ.

சுமார் இருபது ஆண்டுகளாக ஓரளவு நல்ல சேவை வழங்கி வந்த நிறுவனம் இது. இந்திய விமானச் சேவைகள் வரலாற்றில் ஆனானப்பட்ட விஜய் மால்யாவும், ஜெட் ஏர்வேஸும் மண்ணைக் கவ்விய போதும், தொடர்ந்து இலாபம் ஈட்டிய ஒரே நிறுவனம் இண்டிகோதான். இத்தனை ஆண்டு உழைப்பும் பெயரும் இப்படிச் சில வாரங்களில் வீணாக்கப்பட்டுவிட்டது!

எது எப்படியோ, நடுவழியில் எங்காவது போய் மாட்டிக் கொள்ளாமல், சொந்த வீட்டிலேயே இருக்கும்போதே இந்த ‘ரத்து’ வந்தது என்று மனதைத் தேற்றிக்கொள்கிறேன்.

#indigoairlines #IndiGoCrisis


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading