கொரியன் கிரிம் சீஸ் பன் சாப்பிட்ட அனுபவம்

Korean Cream Cheese Bun, Samosa and Badam Milk
பன், சமோசா மற்றும் பாதாம் பால்

சேப்பியன் ஜீனோவிற்கான அடுத்த சில காணொலிகளை இன்று பதிவு செய்தோம். மாலை நான்கு மணி ஆகிவிட்டதால் வீட்டுக்குத் திரும்பும் வழியில் நானும் அருளும் பலகாரம் சாப்பிட நுங்கம்பாக்கம் “ஶ்ரீ மிட்டாய்” உணவகத்தில் நிறுத்தினோம். அங்கே அவர்களின் பிரபல உணவான “கொரியன் கிரிம் சீஸ் பன்” ஆர்டர் செய்தோம். அது இனிப்பாக இருக்கும் என்பதால் கூடவே சமோசா மற்றும் பாதாம் பால் வாங்கினோம். முதல் இரண்டே (பன், சமோசா) வயிற்றை நிரப்பி விட்டதால் பாதாம் பாலை உறையில் வைத்து வீட்டுக்கு எடுத்துப் போனோம்.

ஒரு கொரியன் சீஸ் கிரிம் பன் (Korean Cream Cheese Bun) விலை 95 ரூபாய். இது பெரிய அளவு மெத்தப்பம் (பன்), அதனுள்ளே அளவிற்கு அதிகமான பாலாடைக்கட்டியையும் (சீஸ்), இனிப்பு களிம்பையும் அடைத்து, இதமான சூட்டில் சுடவைத்துத் தருகிறார்கள். ஒவ்வொரு துண்டும் வாயில் போட்டவுடன் கரைகிறது.

அடுத்த முறை இந்தவழியில் போகும் போது சுவைத்துப் பார்க்கவும். காலேரி கணக்குகளைக் கூறி என்னைப் பதற்றமடையச் செய்ய வேண்டாம் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

மென்மையான பன், உள்ளே க்ரீமியான பாலாடைக்கட்டி மற்றும் இனிப்பு களிம்பு.
கொரியன் க்ரீம் சீஸ் பன் – ரூ.95 (ஸ்ரீ மிட்டாய், நுங்கம்பாக்கம்)

பொறுப்பு துறப்பு: இந்தப் பதிவில் எந்த விளம்பரமோ, நிதியுதவியோ பெறப்படவில்லை. முழுக்க நான் காசுக் கொடுத்து வாங்கி பயன்படுத்தும் பொருட்களை அல்லது சேவையைப் பற்றியது. இவை என் தனிப்பட்ட அனுபவம், இதன் பயனைப் பற்றி எந்தவித உத்தரவாதமும் நான் அளிக்கவில்லை. நன்றி.


Discover more from Mangoidiots.com

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading