எனது நண்பரும் தமிழ்க் கணினி உலகின் முன்னோடிகளில் ஒருவருமான திரு முத்து நெடுமாறனின் படைப்பு முரசு அஞ்சல் மென்பொருள். பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கணினிகளுக்குக்காண முரசு அஞ்சல் செயலியை முற்றிலுமாக மேம்படுத்தியுள்ளார் முத்து. எல்லோரும் செல்பேசி செயலிகளை மட்டுமே கவனம் செலுத்தும் இந்தக் காலத்தில் இந்த முயற்சி கணினி பயனர் என்கிற முறையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இது தொடர்பாகவே இன்று சிங்கப்பூரில் நடந்து கொண்டிருக்கும் முரசு அஞ்சல் வெளியீட்டு விழாவில் என்னைப் பதிவு செய்த காணொலி மூலமாக முத்து பேச அழைத்தார். அதையே இணைப்பில் இருக்கும் படத்தில் நீங்கள் காண்கிறீர்கள்.
செயலியோடு சேர்ந்து, திரு கோகிலா எழுதியுள்ள முத்துவின் வாழ்க்கைக் கதையான “உரு” நூலும் இன்று வெளிவருகிறது. இது ஏற்கனவே மெட்ராஸ் பேப்பரில் வெளிவந்து பெரும் வரவேற்பு பெற்ற தொடர் என்பதைக் குறிப்பிட வேண்டும்.
வாழ்த்துகள்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

