துளிர்த்தொழில் தொடங்கிச் சாதித்தவர்கள் பெரும்பாலும் ஏன் ஆண்களாகவே இருக்கிறார்கள்? முப்பத்தைந்து வயதைத் தாண்டியவர்கள் தொழில் தொடங்கலாமா? தொழில்நுட்பம் தெரியாமல் இணைய வணிகச் செயலியை உருவாக்கலாமா?
இது போன்ற கேள்விகளுக்கு விடை இந்தப் பெண் நிறுவனர்.
வெண்மை களிம்பும், உதட்டுச் சாயமும், கண் மையும் என்று மட்டுமே இருந்தது இந்தியப் பெண்களுக்கான அழகுப் பொருள்கள் சந்தை. தொடங்கி ஐந்தே ஆண்டுகளில் இதை மாற்றியது ஒரு நிறுவனம். ‘நைகா’ என்கிற இவர்களது செயலியும், இணையச் சந்தையும் ஆண்டுக்கு ஆறாயிரம் கோடிக்கு அதிகமாக வியாபாரம் செய்கிறார்கள் என்றால் நம்ப முடியவில்லையா?
இந்தக் கதையில் இன்னொரு ஆச்சரியமும் காத்திருக்கிறது. நிறுவனத்தைத் தலைமை ஏற்று நடத்திவருவது ஒரு பெண்ணும் அவரது மகளும். நிறுவனத்தைத் தொடங்கி சுமார் பத்தாண்டுகளில் இவர்களின் குடும்ப மதிப்பு மட்டுமே இருபத்தைந்தாயிரம் கோடி ரூபாய்.
தொடர்ந்து படிக்க இந்த வாரம் மெட்ராஸ் பேப்பரில் எனது கட்டுரையைப் பார்க்கவும். #nykaa #fashion #ecommerce
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

