பேட்டரி சோதனைக் கருவி

நம் வீடுகளில் இருந்த பல மின் சாதனங்களின் (உதாரணம்: டார்ச்லைட், வானொலி, கார்டுலேஸ் தொலைப்பேசி, கால்குலேட்டர்) தேவைகளை இன்று செல்பேசியே செய்வதால் அந்தச் சாதனங்கள் நம் வீடுகளை விட்டுப் போய்விட்டது. அதனால் சிறு பேட்டரிகளின் பயன்பாடும் குறைந்துவிட்டது.

இருந்தாலும் குளிர் சாதனப் பெட்டிகளை, தொலைக்காட்சிப் பெட்டி ரீமோட்களை, சிறுவர்களின் விளையாட்டுப் பொருட்களை, சுவர்க் கடிகாரங்களை என்று பலவற்றுக்கும் சின்ன மின்கலங்களைப் பயன்படுத்துகிறோம். இதற்காகவே வீட்டில் சில பல பேட்டரிகள் இருக்கும், ஆனால் நமக்கு அவசரமாக வேண்டும் என்கிற போது, இருப்பதில் எதிலுமே சக்தி இருக்காது. எந்த பேட்டரிகளில் சக்தி தீர்ந்துவிட்டது, தூக்கி எறிய வேண்டும் என்பதைக் கண்டுபிடிக்க இந்த எளிய சாதனம் பயன்படும்.

இதற்காக அமேசான் மற்றும் ஃபிளிப்காட் தளங்களில் படத்தில் இருப்பது போன்ற பேட்டரி சோதனை (Battery Tester) கருவியை வாங்கலாம். சுமார் இருநூறு ரூபாய்க்குக் கிடைக்கும் இந்தக் கருவியில் AA, AAA, C, D, 9V என்று நம்மூரில் பயன்படுத்தப்படும் எல்லா வகை பேட்டரிகளையும் சோதனை செய்யலாம். நம்மிடம் இருக்கும் பேட்டரிகளில் எவற்றில் சக்தி இருக்கிறது இல்லை என்று கண்டறிந்து, நன்றாக இருப்பதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு பேட்டரியாக எடுத்து சாதனங்களில் மாட்டிப் பார்த்து நேரத்தை வீணாக்க வேண்டாம்.

பேட்டரி சோதனைக் கருவி
பேட்டரி சோதனைக் கருவி

இருநூறு ரூபாயைச் செலவு செய்து இதை வாங்கி வைத்துக் கொண்டால் இன்னும் சக்தி இருக்கும் பேட்டரிகளை வீணாகத் தூக்கி எறியாமல் பயன்படுத்திக் கொள்ளலாம். நேரமும் பணமும் மிச்சமாகும்.

How to use a battery tester?
How to use a battery tester?

#batterytester #RemoteBattery


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

One thought on “பேட்டரி சோதனைக் கருவி”
  1. Good to know, thanks for sharing. if not fully drained but some capacity is there how that can be used on what kind of scenario.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading