கிறுக்கினால் போதும் ஏ.ஐ. ஓவியம் வரையும்

இன்று மாலை எனது விண்டோஸ் கணினியை நோண்டிக் கொண்டிருந்த போது NVIDIA Canvas என்ற ஒரு செயலியைக் கண்டேன். இதுவரை இதை நான் அதிகம் கவனிக்கவில்லை. அதைத் திறந்து பார்த்தபோது, இது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் படங்களை வரையும் ஒரு செயலி என்று தெரிந்தது.

இப்போது பல இயற்றறிவு (Generative AI) தளங்களில் ப்ராம்ப்ட்டைக் கொடுத்தால் அதுவாகவே படங்களை வரைகின்றன. ஆனால் இதில் வித்தியாசம் என்னவென்றால், நீங்கள் ப்ராம்ப்ட் எதுவும் தரத் தேவையில்லை. ஒரு கோடு வரைந்தால், அது உங்கள் வரைவு முறையைப் புரிந்து கொண்டு, தானாகவே சரியான வடிவத்தை உருவாக்குகிறது. உதாரணமாக, வலது பக்கத்தில் உள்ள கருவிப்பெட்டியில் (ToolBox) இருக்கும் “பூ” (Flower) என்ற வடிவத்தைத் தேர்ந்தெடுத்து, திரையில் எங்கே வேண்டுமானாலும் ஒரு கிறுக்கு கிறுக்குங்கள். உடனே அழகான பூ தோன்றும். திரையின் இடம், நேரம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு அந்தப் பூவின் தோற்றம் மாறும். இதேபோல மலை, செடி, கடல், வானம், மேகம் போன்ற பல வடிவங்களும் உள்ளன. என்னைப் போல நேர்கோடு கூட சரியாக வரையத் தெரியாதவர்களுக்கு இந்தச் செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

NVIDIA Canvas App
NVIDIA Canvas App

இந்த இலவசச் செயலியைப் பயன்படுத்தி அழகான இயற்கைக் காட்சிகளை உருவாக்கலாம். ஆனால் பிற வகைப் படங்களை உருவாக்க முடியாது. இது NVIDIAவின் திறன்களைக் காட்டும் ஒரு முயற்சி மட்டுமே. வல்லுநர்களுக்கும் ஓவியர்களுக்கும் இதைவிடச் சக்திவாய்ந்த, துறைசார் செயலிகள் (உதாரணமாக, Adobe Fresco) உள்ளன.

NVIDIA Canvas மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. இதைப் பயன்படுத்த, உங்கள் கணினியில் விண்டோஸ் இயங்குதளம் மற்றும் NVIDIA GPU வன்பொருள் இருக்க வேண்டும். AMD அல்லது Intel GPU இருந்தால் இது வேலை செய்யாது. மேக் கணினிகளிலும் இது இயங்காது. ஆனால் மேக் கணினிகளில் இதே வசதியை வழங்கும் வேறு செயலிகள் இருக்கலாம்.

செல்பேசியில் இது போலப் பல செயலிகள் உள்ளன. ஆனால் கணினிகளில் இது முதல் முறையாக வந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். மைக்ரோசாப்ட் கூட தங்களது பெயிண்ட் செயலியில் இதுபோன்ற ஒரு வசதியை விரைவில் சேர்க்கப் போவதாகச் சொன்ன நினைவு.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading