இன்று, ஞாயிறு காலை நண்பருடன் சென்னை புரசைவாக்கம் பகுதிக்குச் செல்லவேண்டியிருந்தது. முதலில் அருள்மிகு கங்காதரேசுவார் திருக்கோயிலுக்குச் சென்று அமைதியாகத் தரிசனம் செய்துவிட்டு, வயிற்றுக்கு உணவிட எங்கே போகலாம் என்று நண்பரிடம் கேட்டேன். இந்தப் பகுதிக்கு நான் வருவது இது தான் முதல் முறை. நண்பர் உள்ளூர்க்காரர், யோசிக்காமல் சொன்ன இடம் வெல்கம் சைவ உணவகம் (புரசைவாக்கம், சென்னை).

அவர் சொன்னார், “இந்தச் சைவ உணவகம் எந்தளவு புகழ்பெற்றதென்றால், பல ஆண்டுகளுக்கு முன்னர், ஹோட்டல் சரவண பவன் அதன் உச்சத்தில் இருந்த போது அவர்களால்கூட இந்தப் பகுதிக்கு வந்தபோது வெல்கம் ஹோட்டலின் விற்பனையை அசைக்க முடியவில்லை”. அப்படிப்பட்ட வெல்கம் ஹோட்டலுக்கு சென்றோம். காலை பத்து மணியிருக்கும், அப்போதுகூட கீழ்த் தளத்தில் நல்ல கூட்டம், அதனால் முதல் மாடிக்குப் போனோம். சூடான இட்லி சாம்பார் (எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு சாம்பாரை ஊற்றுகிறார்கள்) மற்றும் சுவையான பூரி மசாலா சாப்பிட்டு, பின்னர் ஒரு காபி குடித்து வெளிவந்தோம்.

அடுத்தமுறை நீங்கள் இந்தப் பகுதிக்குச் சென்றால் ஒரு முறை சென்று சாப்பிடவும்.

வெல்கம் சைவ உணவகம், புரசைவாக்கம், சென்னை [The Welcome Hotel, Purasawalkam High Road]

வெல்கம் சைவ உணவகம், புரசைவாக்கம், சென்னை [The Welcome Hotel, Purasawalkam High Road]

Tagged in: