சதாபிஷேகத்தின் பெருமை. 2013இல் என் தந்தை திரு. தி.ந.ச. வரதன் அவர்களின் சதாபிஷேகத்தின் போது அவர் பிரசுரித்தது.

Sathabhishekam is the set of Poojas and rituals that are performed for the couple when the bridegroom’s 81st year starts or when 80th year gets completed. It is usually organized by the couple’s children or relatives. It is considered as an important poojas in our Hindu Traditions. Done on the day on which the janma nakshatra comes in the month. It is believed that the gentleman performing this Puja have crossed 1000 full moons in his lifetime.

ஸ்ரீ ராமஜெயம்

சதாபிஷேகத்தின் பெருமை

மஹாபாரதத்தில்‌, ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா நித்யம்‌ காலையில்‌ 6 பேர்களுக்கு நமஸ்காரங்கள்‌ செய்கிறார்‌ என்று கூறப்பட்டுள்ளது. ஸ்ரீ ருக்மிணி தேவியானவள்‌ ஸ்ரீ பகவானைப்‌ பார்த்து, “ஸர்வலோக சரண்யனான தங்களை உலகத்தில்‌ உள்ள அனைவரும்‌ நமஸ்கரிக்கின்றார்களே! அப்படியிருக்க தங்களைவிட உயர்வு வேறு உண்டா? தாங்கள்‌ யாரை நமஸ்கரிக்கின்றீர்கள்‌?” என்று கேட்டாள்‌.

அதற்கு ஸ்ரீ பகவான்‌ “எனக்கு மேல்‌ இந்த உலகத்தில்‌ 6 பேர்கள்‌ ரொம்ப உயர்ந்தவர்கள்‌:-

  1. நத்யான்ன தாதா – நித்யம்‌ யார்‌ வந்தாலும்‌ பக்தியுடன்‌ அன்னம்‌ போடுகிறவர்கள்‌.
  2. தருணா அக்னி ஹோத்ரி – சிறு வயதில்‌ ஸோம யாகம்‌ செய்து, அக்னி ஹோத்ரம்‌ செய்கிறவர்கள்‌.
  3. மாஸோ உபவா சீச – சாஸ்திரத்தில்‌ சொல்லப்பட்ட விரதங்களை உபவாசமிருந்து அநுஷ்டிக்கிறவர்கள்‌.
  4. பதி விரதாச – பர்த்தாவை தவிர வேறு யாருமே இல்லை என்று பதி சிஷ்ருசை செய்பவர்கள்‌.
  5. வேதாந்த வித்து – சாஸ்திரத்தில்‌ சொல்லியபடி வேதாந்தகங்களைக் கற்றுக்‌கொண்டவர்கள்‌.
  6. சந்தர சகஸ்ர ஜீவீ – 1000 பிறை பார்த்து சதாபிஷேகம் செய்துகொண்டவர்கள்‌.

இந்த 6 பேர்களும்‌ என்னைவிட மிகச்‌ சிறந்தவர்கள்‌ ஆகையால்‌ நான்‌ அவர்களை நமஸ்கரிக்கிறேன்‌” என்று பகவான்‌ பதில்‌ சொல்கிறார்‌.

அதனால்‌ இந்த சதாபிஷேகத்தை தர்சனம்‌ செய்கிறவர்களுக்கு பகவானுடைய பரிபூர்ண அருள்‌ ஏற்பட்டு அவர்களுக்கும்‌ சதாபிஷேகம்‌ செய்துகொள்ளும்‌ பாக்யம்‌ கட்டாயம்‌ கிட்டும்‌.

சுபம்.

சதாபிஷேகத்தின் பெருமை -  திரு. தி.ந.ச. வரதன் அவர்களால் 2013இல் பிரசுரிக்கப்பட்டது.

சதாபிஷேகத்தின் பெருமை – திரு. தி.ந.ச. வரதன் அவர்களால் 2013இல் பிரசுரிக்கப்பட்டது.

Categorized in:

Tagged in: