
Purchase of Pooja items for Ganesh Chaturthi 2019
நாளை பிள்ளையார் சதுர்த்தி பூஜைக்கு எல்லாம் வாங்கியாச்சு! நீங்க?
மொத்தம் (சுமாராக) ரூபாய் 200!
- மண் பிள்ளையார் – ரூ 80,
- குடை ரூ 20,
- வெற்றிலை ரூ 20,
- மீதம் ~ ரூ 70
சென்னை மேற்கு மாம்பலத்தில் வசதி, இங்கே (இந்த விசயத்தில்) கிடைக்காதது எதுவுமில்லை.

நாளை பூஜைகள் முடிந்தப் பிறகு, நாளை மறுநாள், மண் பிள்ளையார் விக்கரகம் வீட்டின் கிணற்றில் போடப்படும் – காணொளியை இங்கே காணவும்!
இந்தப் படத்தில் (வாங்கியப் பட்டியலில்), ஏன் பூ எதுவும் இல்லை என்றால் – பண்டிகை நாட்களில் சென்னையில் பூ வாங்கும் அளவிற்கு நான் இன்னும் வளரவில்லை. அதற்கு தான், வீட்டுகாரம்மா இருக்காங்களே! என்ன தான் தோட்டத்திலிருந்து நாம் வாங்கினாலும், அவங்களின் வாங்கும் திறனுக்கு நாம் வரமுடியாது!
Update: கீழே உள்ளப்படம், இன்று (2 செப்டம்பர் 2019) எங்கள் வீட்டில், மேலே வாங்கிய பொருட்களை வைத்து பூஜைச் செய்த போது:


