தற்போது, அனைத்து தமிழ் படங்களின் பாடல்களும் தயாரிப்பில் இருக்கும் போதே YouTubeஇல் அதிகாரபூர்வமாகவே கிடைக்கிறது. படங்களுக்கு பெரிய விளம்பரமே இவைகள் தான், அந்த வீடியோக்களும் பாடல்வரிகளோடு கிடைக்கிறது. ஒரே வருத்தம் – தமிழ் வரிகள் அனைத்தும் ஆங்கில எழுத்துகளில் (Latin glyphs) தான் தெரிகிறது. இது ஏதோ ஓரிரு பாடல்களுக்கு மட்டுமல்ல, எல்லா பாடல்களும் ஆங்கில எழுத்துகளில் தான் வருகிறது. வெளிநாட்டில் தமிழ் படிக்க தெரியாதவர்களுக்காகத் தான் இப்படி செய்கிறார்கள் என்று நினைக்கிறேன், எல்லோரும் பயன் பெற வேண்டும் என்பது நல்லெண்ணம் தான் – பாராட்டுகள். ஆனாலும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழ் வரிகளை தமிழ் எழுத்துகளிலேயும் கொடுத்தல் மகிழ்ச்சியாக இருக்கும். கவிஞர்கள் தமிழில் தான் தமிழ் பாடல்களை எழுதியிருப்பார்கள், புதிதாக தட்டச்சு செய்ய வேண்டி இருக்காது, அதனால் செலவும் உழைப்பும் பெரிய அளவில் தேவை இருக்காது என நினைக்கிறேன்.

Using YouTube API, multiple languages closed caption can be done easily.

Categorized in:

Tagged in: