ஆங்கிலம் தெரியுமோ இல்லையோ, தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில், கடைகளில் இருக்கும் கணினி கொடுக்கும் ரசிதுகள் ஆங்கிலத்தில் தான் உள்ளது. இப்போது இருக்கும் எல்லா கணினியிலும் பிரிண்டர்களிலும் தமிழில் அடிப்பதற்கும் ஆங்கலத்தில் அடிப்பதற்கும் செய்ய வேண்டிய முயற்சி ஒன்றே தான். இருந்தும் இந்த நிலை.

இந்த நிலையில் இன்று மேற்கு மாம்பலத்தில் ஒரு பலச்சரக்கு கடையில் எண்ணெய் வாங்கினேன். அதற்கு ரசிது தமிழில், நான் கேட்காமலேயே!. பார்க்க இன்னும் அழகாக இருக்கலாம்.
வாடிக்கையாளர் எதுவும் சொல்லா விட்டால் தமிழ் நாட்டில் தமிழில் ரசிதுகளை கொடுக்கலாம்; அவர்கள் விரும்பினால் ஆங்கிலத்தில் அல்லது ஹிந்தியில் அல்லது பிரஞ்சில் கூட கொடுக்கலாம். இருக்கவே இருக்கிறது Google translate, அதை வியாபார மென்பொருளே தன்னுள் கூப்பிட்டு கொள்ளும், பயனருக்கு ஒரு அதிகப்படி வேலையும் இருக்காது.

 

Categorized in:

Tagged in:

,