
Sri Adhi Kesava Perumal Koil
ஶ்ரீ ஆதி கேசவப் பெருமாள் கோயில், கோவிந்தன் தெரு, மேற்கு மாம்பலம் – ஶ்ரீநிவாசா தியேட்டர் அருகில் உள்ள இந்த திருக்கோயில் இந்த பகுதியில் இருக்கும் முக்கியமான ஒரு பழங்கால பெருமாள் கோயில். இங்கே இருக்கும் சந்நதிகள் – ஆதி கேசவப் பெருமாள், செங்கமலவல்லி தாயார், ஸ்ரீநிவாச பெருமாள், தும்பிக்கை ஆழ்வார் (விநாயகர்), ஆஞ்சநேயர், ஆண்டாள், ஶ்ரீ ராமானுஜர், கருடாழ்வார், இப்பொது புதிதாக ஶ்ரீ சக்கரத் தாழ்வார் மற்றும் ஶ்ரீ நரஸிம்மர் சந்நிதி.
பொலிவிழந்திருந்த கோயிலை இந்தாண்டு தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை (அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது இந்த கோயில்) நல்ல முறையில் புணரமைத்துள்ளார்கள், பார்க்கவே புதுப்பொலிவோடு இருக்கிறது.

