Movie Review

Oru Oorla Rendu Raja (2014) – half movie review

ஒரு ஊருல ரெண்டு ராஜா” – விமல், சூரி, ப்ரியா ஆனந்த் நடித்துள்ள இந்தப் படத்தை லக்ஸ் திரையரங்கில் நேற்று (பாதிப்) பார்த்தேன். இடைவேலைக்கு மேல் உட்கார முடியவில்லை எழுந்து வந்துவிட்டேன்.

படிக்காமல் வேலைவெட்டி இல்லாமல் சுத்தும் இளைஞர் விமல், அவரின் நண்பர் சூரி. சூரியின் திடிர் காதலை சேர்த்து வைப்பதாகச் சொல்லி காதலியை வீட்டிற்கே திரும்ப அனுப்புகிறார் விமல். காதலியின் பெற்றோர் துரத்த  இருவரும் (சூரி, விமல்) ஓடும் இரயிலில் தப்பிக்க, இரயில் பேட்டியில் அவசர பிரசவம் பார்க்கும் டாக்டர் ப்ரியா ஆனந்தின் மேல் விமல் காதல் கொள்கிறார்.  ப்ரியாவைக் கொல்ல வில்லன் கும்பல் துரத்தி வர, அதற்கான காரணத்தை அவர் சொல்கிறார், விமல் அவரை பாதுகாக்க சபதம் செய்கிறார். காரணம் – நாசர் நடத்தும் இரும்பு உருக்காலையில் நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் ப்ரியா தொடுத்துள்ள ஒரு வழக்கு தான்.

இன்னும் எத்தனைக் காலம் தான், சோஷலிஸமும், முதலாலிகள் கொடுமைக்காரார்கள் என்றும் பேசுவார்களோ தெரியவில்லை.  இயக்குனர் “ஆர்.கண்ணன்” சார், அதே போல இரயில் காதல் எல்லாம் பாத்தாச்சு, ரொம்ப பழசு. புதுசா ஏதாவது சொல்லுங்க ப்ளிஸ்.

  • ப்ரியா ஆனந்த் – வணக்கம் சென்னையில் நடித்த பெண்ணா இது?, என் இப்படி பஞ்சத்தில் அடிப்பட்டு இருக்கிறார், பாவம். தயவு செய்து சாப்பிட்டு உடம்பை தேத்துங்க மிஸ். 
  • சூரி – எல்லா படத்திலும் யாரையாவது திட்டி/கேவலப்படுத்தி/அடித்துக் கொண்டே இருக்கிறார், இதிலும் அப்படித் தான்.
  • விமல் – இவர் தான் நாயகனாம்!
  • ஆர்.கண்ணன் – ஜெயம் கொண்டான் மற்றும் பல வெற்றி படங்களை தந்த இயக்குனருக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை, இந்த படத்தை எடுக்க!

மார்க் (முதல் பாதிக்கு) :  0.5 / 5

Oru-Oorla-Rendu-Raja-Movie