
K.P.D. Sirippuraja chozhan by Crazy Mohan
கிரேஸி மோகனின் “கே.பி.டி.சிரிப்புராஜ சோழன்” என்ற இந்த சரித்திர (திரிக்கின்ற) நகைச்சுவைப் புத்தகத்தைப் படித்தேன், சிரித்தேன், சிரித்துக் கொண்டேயிருந்தேன். அருமை!
ஒரு விஷயத்தை முழுக்க சொல்லிவிட்டு (கதை விட்டுவிட்டு), அதற்கு கீழே அதற்கு ஆதாரம் என்று வேறு மேலும் கதை விடுகிறார் கிரேஸி. அதே போல பெயர்களிலே நம்மை சிரிக்க வைக்கிறார், உதாரணம்: கே.பி.டி.சிரிப்புராஜ சோழன்… அதாவது தந்தையின் பெயர் கேணக்கிறுக்கசிம்மன் (முதல் எழுத்து கே) தலைநகரம் பித்துப்பிடிச்சான்பாளையம் முதல் எழுத்து பி), ஆராய்ச்சி மணியின் சத்தம் டிங்டாங் (முதல் டி) இப்படி. மற்ற கதாப்பாத்திரங்களின் பெயர்களையும் விட்டுவைக்கவில்லை “ராஜகுரு படுகிழதோப்பனார்”, படைத் தளபதி “அவசரக் குடுக்கை அரையர்” என்பது போலப் பல.
ஒரே காமெடி கதையில் ஒரு போர், காதல், தேர்தல், பழிவாங்குதல், தந்தைப்பாசம் என்று அனைத்துயும் கலந்து அடித்திருக்கிறார் கிரேஸி, நிச்சயம் கிரேஸியானது தான் இது. தற்கால இந்தியாவில் நடக்கும் தேர்தல் குளறுப்பாடுகளை, நல்ல நகைச்சுவையாகவும் அதுவும் ஒரு புராண கதையில் சொல்லி சாடமுடியம் என்றால் அது கிரேஸியால் மட்டும் தான் முடியும். அதையும் இந்தப் புத்தகத்தில் செய்கிறார்.
கிழக்கு பதிப்பகத்தின் ஒரு வெளியிடு இது, படிக்கவும், சிரிக்கவும் – கண்டிப்பாக உங்கள் ரத்த ஆழுத்தம் ஒரு பத்து புள்ளிகளாவது இதை படிந்தநாளில் குறையும்.



One Comment
barani
good sites for all peoples…………….