
Villu (2009)
படம் திரை அரங்கைவிட்டுச் சென்றுப் பல மாதங்கள் ஆகிவிட்டது, ஆனால் இன்று தான் நான் பார்த்தேன் – கொஞ்சம் லேட் தான். வில்லு, விஜய் (Vijay) – பிரபுதேவா (Prabhu Deva) காம்பினேஷன். போக்கிரியால் கவரப்பட்ட எனக்கு, இந்தப் படத்தின் மேல் ஒரு எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்ப்பை மிக குறைவாகத் தான் பிரபுதேவா புர்த்திச் செய்துள்ளார், இன்னும் யோசித்து செய்துயிருக்க வேண்டும். போக்கிரியில் ஜெயித்தப் பல விஷயங்களை அப்படியே பயன்படுத்தியுள்ளார், அதனால் பல இடங்களில் பழையச் சோறு வாசம்.
சொல்லும்படி படத்தில் ஒன்றுமில்லை. விஜய் ரொம்ப உழைத்துயிருக்கிறார் – நடனக்காட்சிகளிலும், சண்டைக்காட்சிகளிலும் அவரின் உழைப்பு தெரிகிறது, திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருந்தால் படம் நன்றாக வந்திருக்கும். படம் பல இடங்களில் ஆங்கில ஜேம்ஸ் பாண்டு படங்களையும் உள்ளூர் அர்ஜுன் படங்களையும் நினைவுப் படுத்துகிறது. பெரிய அளவில், வெளிநாட்டிற்கு எல்லாம் சென்ற கதை கடைசியில் பலத் தமிழ் படங்களைப் போலவே ஒரு பழைய கோவிலில் முடிவது சப்பென்று போய் விடுகிறது.
தமிழ் சினிமாவில் எல்லா நாயகர்களுக்கும் எம்.ஜி.ஆர். மேல் பக்தியிருக்கலாம் தப்பில்லை, ஆனால் அவரோடு ஒப்பிட்டு/அவர் செய்ததையேச் செய்யக் கூடாதென்று என்று தான் புத்தி வருமோ?. வில்லு – அம்பில் கூர்மையில்லை, மொக்கை!

