தமிழில் வெளிவரும் வார இதழ்களில் நான் அநேகமாகப் படிப்பதும், எனக்கு பிடித்ததும் வாசகர்களால் ஆவி (a.k.a Ghost) என்று அன்பாக சொல்லப்படும் – “ஆனந்த விகடன்” பத்திரிகை.

27/08/06 தேதியிட்ட ஆவியில், சத்குரு ஜக்கி வாசுதேவ் ஒரு வேண்டுகொள் விடுத்திருக்கிறார். 15/10/2006 அன்று அவரின் ஈஷா அமைப்பு 7லட்சம் மரக்கன்றுகளை ஒரே நாளில் நடும் பணியில் ஈடுபடுகின்றனர். இது நடந்தால் இது ஒரு கின்னஸ் சாதனையாகும். உங்களுக்கு நேரமில்லை/இடமில்லை என்றால், உங்கள் பெயரால் மரக்கன்றுகளை “ஈஷா” நட்டுப் பராம்ரித்து வளாக்க நிங்கள் கன்று ஒன்றுக்கு ரூ.10 வீதம் “Isha Foundation“, 55 Moosa Street, T.Nagar, Chennai 600 017 என்ற முகவரிக்கு, உங்கள் பெயர்/முகவரியுடன் ஒரு வங்கி காசேலை (DD) அனுப்பலாம். என் பங்களிப்பு வரும் திங்கள் காலை அனுப்பி வைக்கப்படும்.

இது ஒரு நல்லப் பணி, இப்பொழுது உலகிற்க்கு தேவையான நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

Categorized in:

Tagged in: