இன்றைய வைகுண்ட ஏகாதசி திருநாளில் கோயில்களுக்குச் சென்றபோது எடுத்த படங்கள்.
🛕முதலில் எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஶ்ரீ ராம ஆஞ்சனேயர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தேன்.
🛕அடுத்து, கூட்டம் மிக அதிகமாக இருக்கும் எனத் தெரிந்தே அதைக் காணத் திருவல்லிகேணி ஶ்ரீ பார்த்தசாரதி கோயிலுக்குப் போனேன். எதிர்பார்த்தபடியே பல வளையங்களாக, நெடுவரிசைகளில் மக்கள் காத்திருந்தனர். தூரத்தில் இருந்தே கோபுரத்தைத் (கோபுர தரிசனம் கோடி புண்ணியம்) சேவித்து, சுற்றுத் தெருக்களில் ஒரு பிரதட்சிணம் செய்தேன். சாரதியை மனதில் வேண்டி வந்த ஆட்டோவிலேயே கிளம்பினேன்.
🛕அடுத்தது மைலாப்பூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு மாதவப்பெருமாள் திருக்கோயிலுக்குச் சென்றேன். இங்கே மூலவரைச் சேவிக்க நல்ல கூட்டம். சொர்க்கவாசல் வழியாக வந்து உற்சவரையும் அடுத்துத் தாயார் சன்னதியில் தாயாரையும் தரிசனம் செய்யும் பேறு பெற்றேன். சர்வே ஜனா சுகினோ பவந்து (“அனைத்து மக்களும் நலமுடன் வாழட்டும்”), உலகில் போர்கள் ஓய வேண்டும் என வேண்டி வந்தேன்.
இப்படியாக இன்றைய காலை மனநிறைவாகக் கழிந்தது.







Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

