கிழக்கு நியூஸ் ஓடையில் நான் பேசிய காணொலி. செயற்கை நுண்ணறிவை (ஏ ஐ) ஓர் எளிய விளக்கத்தைக் கொடுத்திருக்கிறேன்.

அதோடு ஏஐ எப்போது தொடங்கியது, அதன் பல்வேறு பிரிவுகள் என்ன? ஏன் சாட்ஜிபிடி கடந்த இரண்டு ஆண்டுகளில் இவ்வளவு பிரபலமாகியிருக்கிறது? ஏஜிஐ (AGI) என்றால் என்ன?

பார்த்துவிட்டு தங்களின் கருத்துகளைப் பகிரவும். நன்றி. #KizhakkuNews #Kizhakku

26 ஜனவரி 2026

இன்று இதன் இரண்டாவது பாகம் வெளிவந்துள்ளது. அதைப் பார்த்துவிட்டு எனது நண்பர் திரு. சுஜாதா தேசிகன் எழுதியுள்ள பகிர்வு கீழே. அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

AI – பாய்ச்சலின் பின்னணி, அறியாத தகவல்கள்…

சற்று முன், ’கீழக்கு நியூஸ்’ (Kizhakku News) சேனலில் நண்பர் மற்றும் மென்பொருள் வல்லுநர் வெங்கட்ரங்கன் செயற்கை நுண்ணறிவு குறித்து எனக்கும் புரியும்படி பல விஷயங்களை சொல்லியுள்ளார். மிகவும் பயனுள்ள பல தகவல்கள் அதில் இருந்தது.

GPU தான் ராஜா – AI இவ்வளவு வேகமாக வேலை செய்வதற்கு பின்னால் இருக்கும் அந்த ‘சிப்’ மர்றும் அதின் பின் உள்ள போட்டி, அரசியலும், அதன் அசுர வேகமும் என்று எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்.

சீனா எப்படி அமெரிக்காவிற்கு சவால் விடும் வகையில் மிகக் குறைந்த செலவில் ஒரு மாபெரும் AI மாடலை உருவாக்கியது என்பதை ஒரு கதைப் போல சொல்லியிருக்கிறார். DeepSeek-ன் வருகைக்கு சீனா 10-15 வருடத்திற்கு முன்னே அவர்கள் யோசித்தது இதற்கு காரணம்.

பாதுகாப்பு மற்றும் ராணுவ தேவைகளுக்காக இந்தியா ஏன் தனக்கென ஒரு சொந்த AI தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும். இன்று முதலீடு செய்தால் இன்னும் 10 வருடத்தில் ஏதாவது முன்னேற்றம் ஏற்படலாம் என்கிறார்.

கல்வி மற்றும் மருத்துவத் துறையில் (குறிப்பாக புற்றுநோய் ஆராய்ச்சி) AI ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள் மனித குலத்திற்கு ஒரு வரப்பிரசாதம்.

தொழில்நுட்பம் குறித்து தமிழில் இவ்வளவு ஆழமான மற்றும் தெளிவான விளக்கங்களைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

AI பற்றி தெரிந்துகொள்ள விரும்பும் அனைவரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய வீடியோ இது!

பிகு: வீடியோவை முழுவதும் பார்த்துவிட்டு, இந்த விமர்சனத்தை ஏ.ஐ உதவியுடனே எழுதினேன்!

-சுஜாதா தேசிகன்
26.1.2026
குடியரசு தினம்

 


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

2 thought on “ஐ (AI) – ஓர் எளிய விளக்கக் காணொலி”
  1. Well explained, AI winter to comeout as AI cloud is one of the primary sources helped lot to train . Rock Vengi!

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading