“அமிர்தத்தைத் தள்ளி வை, அடுத்த ரவுண்ட் நீ போடு”, இந்த வரிகள் எட்டு ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை வெளிவராத நடிகர் நடிகர் சந்தானத்தின் நடிப்பில் எடுக்கப்பட்ட சர்வர் சுந்தரம் படத்தில் “கம கம சமையல்” என்கிற பாடலில் விவேக் அவர்களின் எழுத்தில் வரும். அது போல, அமிர்தம் என்று ஒன்றை எப்படிக் கற்பனை செய்திருந்தேனோ அது போலச் சுவையாக இது இருந்தது.

இதன் பெயர் ட்ரெஸ் லேச்சே (Tres Leches). இது என்னவென்று படிக்கும் போதே நாக்கில் எச்சில் ஊரினால் நான் பொறுப்பில்லை. ட்ரெஸ் லேச்சே என்பது மேக்சிகோ நாட்டு உணவு வகை. மூன்று வகையான பாலில் ஊறவைக்கப்பட்ட ஸ்பாஞ்ச் கேக்.

சென்ற வாரம் எனது நண்பரின் மகன் பெங்களூர் சென்றிருந்தான், அலுவல் வேலையாக அங்கிருந்தவன் வேறொரு விசயமாக அழைத்தான், அதைப் பேசிவிட்டு, “மாமா, இங்கே மக்னோலியா பேக்கரில் இருக்கிறேன், ஓர் அருமையான கேக் சாப்பிட்டேன், உங்களுக்கு வேண்டுமா” என்றான். “என்ன கேள்வி, வாங்கிவா” என்றேன். நல்லவேலை அன்றே விமானத்தில் வந்தவன், சொன்னபடியே இந்த இனிப்பைப் பாத்திரமாகக் கொண்டுவந்தான். உடனே சுவைத்துவிட்டேன்.

ஆகா, என்ன சுவை. பல மணி நேரம் ஊறியிருந்ததால் அதன் சுவைக் கூடி அபாரமாக இருந்தது. நாவில் வைத்தவுடன் கரைந்தது.

நீங்கள் அடுத்த முறை பெங்களூர் சென்றால், மக்னோலியா பேக்கரில் (Magnolia Bakery) கிடைக்கும் இந்த ட்ரெஸ் லேச்சே மறக்காமல் சுவைக்கவும், எனக்கும் ஒரு டப்பா வாங்கிவரவும்.

magnolia bakery
magnolia bakery
Tres Leches
Tres Leches

பொறுப்பு துறப்பு: இந்தப் பதிவில் எந்த விளம்பரமோ, நிதியுதவியோ பெறப்படவில்லை. முழுக்க நான் காசுக் கொடுத்து வாங்கி பயன்படுத்தும் பொருட்களை அல்லது சேவையைப் பற்றியது. இவை என் தனிப்பட்ட அனுபவம், இதன் பயனைப் பற்றி எந்தவித உத்தரவாதமும் நான் அளிக்கவில்லை. நன்றி.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading