நம்மில் பலர் ட்ரூகாலர் (Truecaller) செயலியை ஸ்பேம் அழைப்புகளை அடையாளம் காணப் பயன்படுத்துகிறோம். ஆனால், அதில் உள்ள ‘Scams’ என்ற மூன்றாவது பொத்தானை (டேப்-ஐ) நீங்கள் கவனித்ததுண்டா?
இந்த வசதி ஆன்ட்ராய்ட் (Android) செல்பேசிகளில் மட்டுமே உள்ளது; ஐபோனில் (iPhone) கிடையாது. இதனாலேயே நம்மில் பலருக்கு இது தெரிவதில்லை.
இந்த ‘Scams’ பகுதியில், புதிதாக வரும் இணைய-வழி மோசடிகள், வாட்ஸ்அப் (WhatsApp), ஜிபே (GPay) போன்றவற்றில் நடக்கும் ஏமாற்று வேலைகள் பற்றி விழிப்புணர்வு தகவல்கள் தினமும் பதிப்பிக்கப்படுகிறது. இது என்னென்ன புதிய மோசடிகள் வந்துள்ளன என்பதைத் தெரிந்துகொண்டு, நம்மைப் பாதுகாத்துக் கொள்ள மிகவும் உதவும்.
அடுத்த முறை ட்ரூகாலர் திறக்கும்போது, அந்த மூன்றாவது பொத்தானைத் தட்டி ஓரிரு நிமிடங்கள் திரையில் வரும் மோசடிகளைப் பாருங்கள். இதைப் பற்றிய மேலும் விவரங்களை இந்தக் குறும்படத்தில் (Shorts) பேசியுள்ளேன்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

