வருடா வருடம் நான் செல்லும் புனிதப் பயணத்தை அதன் தொடக்க நாளன்றே சென்று வந்துவிட்டேன். கூடுதல் சிறப்பாக எழுத்தாளர்கள் திரு மனுஷ்ய புத்திரன் மற்றும் மெட்ராஸ் பேப்பர் ஆசிரியரும் எனது நண்பருமான திரு பா ராகவன் அவர்களையும் பார்த்துப் பேசி, படம் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.

சென்னை புத்தகக் காட்சிக்கு முதல் மாலையில் கூட்டம் இல்லை, தீவிர வாசகர்கள் மட்டுமே வந்திருந்தார்கள். இருந்த பத்து வரிசைகளையும், மொத்தமாக (சுமார்) 700 கடைகளையும் நடந்து சென்று வெளியிலிருந்து பார்க்க, சுமார் 50 கடைகளுக்குள் போய் வர மூன்று மணி நேரம் ஆனது. இந்த ஆண்டு ஜனவரி 12, 2025 பொங்கல் விடுமுறைக்கு முன்னரே புத்தகக் காட்சி முடிந்துவிடுகிறது. அதனால் சீக்கிரம் போய் புத்தகங்கள் வாங்கி வாருங்கள். எனது ‘நுட்பம்’ நூல் Zero Degrees கடையில் (எண் 540, 541) கிடைக்கும்.

திரு பா ராகவன், திரு மனுஷ்ய புத்திரன் அவர்களுடன் நானும்!
திரு பா ராகவன், திரு மனுஷ்ய புத்திரன் அவர்களுடன் நானும்!
முதல் வரிசைப் புத்தகக் கடைகள்
முதல் வரிசைப் புத்தகக் கடைகள்
தமிழ் இந்து திசைக் கடையில்
தமிழ் இந்து திசைக் கடையில்
ஆற்றுப்படையும், சங்க இலக்கிய நூல்களும் - தமிழக அரசின் பாடநூல் நிறுவனம்
ஆற்றுப்படையும், சங்க இலக்கிய நூல்களும் – தமிழக அரசின் பாடநூல் நிறுவனம்
தமிழக வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியம் - தமிழக அரசின் பாடநூல் நிறுவனம்
தமிழக வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியம் – தமிழக அரசின் பாடநூல் நிறுவனம்
கடைசி வரிசைக் கடைகளில்
கடைசி வரிசைக் கடைகளில்
பா.ரா. மற்றும் மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்களுடன்
பா.ரா. மற்றும் மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்களுடன்

Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading