“இரண்டு சுமாரான தயாரிப்புகளைச் செய்வதை விட, ஒரு சிறந்த தயாரிப்பைச் செய்வது மேல், அதற்குத் தேவையானது முழுக் கவனம் என்று எனது முதல் மேலாளரிடம் இருந்து கற்றுக் கொண்டேன்”. இதைச் சொன்னவர் நெட்பிளிக்ஸ் இணைய ஒளிபரப்பு நிறுவனத்தின் நிறுவனருமான ரீட் ஹேஸ்டிங்ஸ் (Reed Hastings). சீனா, சிரியா, ரஷ்யா, மற்றும் வட கொரியா – இந்த நான்கு நாடுகளைத் தவிர உலகில் இருக்கும் 190க்கு மேற்பட்ட நாடுகளில் இந்த நிறுவனத்தின் பொழுதுபோக்கு செயலி கிடைக்கிறது. நெட்பிளிக்ஸ் பயனர்கள் அதில் தினமும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் செலவு செய்கிறார்கள். இந்தளவு பிரபலமான இந்தச் சேவை உருவாக்கப்பட்டு வளர்ந்த கதையை மெட்ராஸ் பேப்பரில் படிக்கலாம்.
கட்டுரையில் இருந்து சில பத்திகள்
நெட்பிளிக்ஸின் பயனர் செயலிகளிலும் மேகக் கணிமையில் இயங்கிய பின்னணி மென்பொருள்கள் இருந்த மூல நிரல்களிலும் நீளம் அதிகரித்துக் கொண்டே போனது. அவர்களின் சேவையே தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கிய செயலி என்பதுதான். இதனால் நிரல்களில் வந்துவிடும் தவறுகள், மேகக் கணிமை வளங்களை ஒருங்கிணைப்பதில் வரும் தவறுகள், பயனர்களின் அனுபவங்களை பாதிக்கத் தொடங்கின.
இந்தத் தவறுகளை வரும் முன்னே கண்டு கொள்ள நிறுவனத்தின் மூன்று புத்திசாலி பொறியாளர்கள் கண்டுபிடித்த நெறிமுறை கயாஸ் மங்கி (Chaos Monkey). இந்த மென்பொருள் நிரலி யாருக்கும் சொல்லாமல் திடீர் திடீரென்று பயனர் சேவைகளை வழங்கிக் கொண்டிருக்கும் ஓரிரு கணினிகளை வேண்டுமென்றே நிறுத்திவிடும். இப்படிச் செய்வது பொறியியலில் முறையில் பலருக்கும் முட்டாள் தனமாகத் தோன்றியது. அதனால் தான் இதற்குச் சேதக் குரங்கு என்கிற பொருள் வரும் பெயரை வைத்தார்கள். இப்படிச் சோதிக்கப்பட்டாலும் பயனரின் சேவையில் எந்தப் பாதிப்பும் தெரியாத வண்ணம் நிரல்கள் உருவாக்கப்பட்டன. இந்த நெறிமுறையைச் செயல்படுத்தத் தொடங்கிய 2011ஆம் ஆண்டிலிருந்து நெட்பிளிக்ஸ் சேவையின் நம்பகத்தன்மை அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. இன்றைக்கு முன்னணி நிறுவனங்கள் பலருக்கும் இந்தத் திறமூலச் சேதக் குரங்கு ஓர் உற்ற நண்பனாக இருக்கிறது.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

