Phishing attempt by forging an email from Godaddy

யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல, சில நிமிடங்களுக்கு முன்னர் இது நடந்தது.

எனக்கு ஒரு மின்-அஞ்சல் வந்தது. தலைப்பு: “Action required: GoDaddy email problems“. அதில் இப்படி இருந்தது “We are unable to deliver your recent messages due to DNS issues. Download the attachment to review the affected messages.”. என்னுடைய வியாபார இணையத் தளம் GoDaddy நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்டது, அதனால் அவர்கள் அனுப்பிருப்பார்கள் என்று நினைக்கிறேன். கூடவே ஓர் HTM ஃபைல்லையும் இணைத்திருந்தார்கள்.

வேறு அவசர வேலையில் இருந்ததால், சந்தேகப்படும் படி, வந்த முகவரி இல்லை என்று மட்டும் பார்த்துவிட்டு, யோசிக்காமல் அந்த இணைப்பை Firefox உலாவியில் திறந்துவிட்டேன். நல்ல வேலை, அதனுள்ளே இருந்த இன்னொரு இணையப் பக்கம் திறக்கவில்லை. அப்போது தான் சுதாரித்துக் கொண்டேன், ஐயோ எதுவாக இருந்தாலும் இணைப்பாக வந்த HTM ஃபைல்லை திறந்திருக்கக் கூடாதென்று. இப்போது என்னால் என்ன செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்து என் கணினி பாதுகாப்பாக இருக்கிறது என்று உறுதி செய்துள்ளேன்.

Phishing email with HTM payload
Phishing email with HTM payload

ஒரு விநாடி கவனக்குறைவினால் அடுத்த ஒரு மணி நேரத்தைச் செலவு செய்து எல்லாம் பாதுகாப்பாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டி வந்துவிட்டது. GoDaddy பயனர் சேவைக்குப் பேச முயன்றேன், இன்றைக்கு 7 மணியோடு மூடிவிட்டார்கள். இருந்தாலும் டுவிட்டர் மூலம் கோ-டாடியை தொடர்பு கொண்டதில் அவர்களிடம் இருந்து இந்த மின்-அஞ்சல் வரவில்லை, இது நிச்சயம் போலியானது என்று நேரடியாகப் பதில் சொல்லிவிட்டார்கள். கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக் போன்ற மிகப் பெரும் நிறுவனங்களிடம் இந்த மாதிரியான கேள்விக்குப் பதிலே வராது, அப்படியே வந்தாலும் பொத்தாம் பொதுவாக எதுவுமே புரியாத, வழக்கறிஞர் மொழியில் மட்டுமே பதில் சொல்லுவார்கள், அந்தவிதத்தில் GoDaddy பரவாயில்லை, அவர்களுக்கு நன்றி.

Reply from Godaddy through Twitter
Reply from Godaddy through Twitter

Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading