நேற்று, வழக்கமான கண் பரிசோதனைக்கு மாலை நான்கு மணிக்குக் கிளம்பினேன். ஒரு மணி நேரத்தில் வந்துவிடுவேன் என்று திட்டம் – அதனால் போகும் முன்னர் காபி கூட குடிக்கவில்லை. கண் மருந்து போட்டு உட்கார வைத்து, பயிற்சி மருத்துவரைப் பார்த்து, பிறகு தலைமை மருத்துவரைப் பார்த்து, எல்லாம் முடிந்து வர மூன்றரை மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது. அங்கே சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. வீட்டுக்கு வரும் போது நல்ல பசி.
இன்று, ஓர் அலுவல் ரீதியான சந்திப்புக்கு ஒன்றரை மணிக்குக் கிளம்பிச் சென்றேன். நேற்று மாதிரி வர நேரமாகிவிட்டால் என்ன செய்ய என்று யோசித்து, மனைவியிடம் கேட்டு ஒரு டப்பா சுண்டல் பையில் எடுத்துச் சென்றேன். என் அதிர்ஷ்டம் சந்திப்பு சீக்கிரமாக முடிந்து, போக்குவரத்து நெரிசலும் குறைவாக இருந்து வீட்டுக்கு இரண்டு மணி நேரத்தில் வந்துவிட்டேன். கொண்டு சென்ற சுண்டலை வீட்டுக்கு வந்து தான் உண்டேன். அடுத்து என்ன நடந்தது என்று சொல்லத் தான் வேண்டுமா?
#சுண்டல் #வாழ்க்கை
Discover more from Mangoidiots.com
Subscribe to get the latest posts sent to your email.

