Faith,  தமிழ்

Tamil The Hindu series – Sufi’s path

இந்து தமிழ் திசை நாளிதழ்: “சூபிகளின் ஞான வழி”

ஆங்கில இந்து நாளிதழை (The Hindu English Newspaper) நான் நிறுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டது, அவர்களின் அரசியல் நிலைப்பாடு ஒரு காரணம், ஆனால் முக்கியக் காரணம் படிப்பதற்குப் பெரிதாக எதுவும் இப்போதெல்லாம் அந்த நாளிதழில் இல்லை.

நான் படிப்பது டைம்ஸ் ஆப் இந்தியா தான். ஆங்கில மொழி தவறுகளும், இலக்கணப் பிழைகள் இருந்தாலும் பலவகையான செய்திகள், சென்னை நகர நடப்புகள், சினிமா தகவல்கள், தொழில்நுட்ப விஷயங்கள் இருக்கிறது.

ஒன்றை விட ஒன்று சிறந்தது என்று சொல்லவில்லை, என் விருப்பத்தைச் சொல்கிறேன்!

அதே சமயம் தினம் காலை நான் முதலாவதாகவும் முழுமையாகவும் படிப்பது தமிழ் இந்து நாளிதழ் தான். அதில் வரும் செய்திகளை விட அதில் வரும் தொடர் கட்டுரைகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது – பல உள்ளூர், வெளியூர், வெளிநாட்டு அறிஞர்களின் கட்டுரைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழில், மிக அழகாக மொழிபெயர்ப்புச் செய்து வெளியிடுகிறார்கள். என்னதான் நமக்குப் புரியாத, தெரியாத, புடிக்காத விஷயமாக இருந்தாலும் அதை ஆங்கிலத்தில் படிப்பதைவிடத் தாய்மொழி தமிழில் படித்தால் அந்த விஷயத்தில் ஒரு ஈடுபாடு வருகிறது, முழுவதுமாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

குறிப்பாகத் தமிழ் இந்துவோடு தினம் வரும் இணை இதழ்கள், உதாரணம் வியாழன் தோறும் வரும் “சூபிகளின் ஞான வழி” என்னும் தொடரில் நமக்குப் பரிட்சயம் இல்லாத சூஃபி அறிஞர்களின் தத்துவங்களையும், அவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவையான தருணங்களையும் சுருக்கமாகக் கொடுக்கிறார்கள். நன்றி!

“செல்வந்தர்களுடன் நட்புறவை விரும்பும் துறவி, ஒரு நயவஞ்சகனாக மட்டுமே இருக்க முடியும். அதே போல் அதிகாரத்தில் இருப்போரிடம் நட்புறவை விரும்பும் துறவி ஒரு திருடனாக மட்டுமே இருக்க முடியும்”
“செல்வந்தர்களுடன் நட்புறவை விரும்பும் துறவி, ஒரு நயவஞ்சகனாக மட்டுமே இருக்க முடியும். அதே போல் அதிகாரத்தில் இருப்போரிடம் நட்புறவை விரும்பும் துறவி ஒரு திருடனாக மட்டுமே இருக்க முடியும்”

சூபிகளின் ஞான வழி” தொடரை நான் ஒரிரு வருடங்களாகத் தவறாமல் படிக்கிறேன். இது புத்தகமாக வரும் போது வாங்க வேண்டும்.

Update 27th Feb 2020:

இந்து தமிழ் திசை நாளிதழில் வியாழன் தோறும் வரும் ஆனந்த ஜோதி என்ற இணைப்பில், பல மதங்களிலிருந்து கதைகளும், ஆன்மீக கருத்துக்களையும் தேர்ந்தெடுத்து கொடுக்கிறார்கள். இந்து மதத்தில் இருந்து பல விஷயங்கள் இதில் வந்தாலும், என்னை கவர்ந்தவை மற்ற மதங்களிலிருந்து வரும் கருத்துக்கள். அந்த வரிசையில் இஸ்லாத்திலிருந்து இறைத்தூதர் மற்றும் அறிஞர்கள் வாழ்வில் நடந்தவை மற்றும் அவர்கள் சொல்லியவை, மிக எளிமையாக, சுவாரஸ்யமாக இருக்கிறது. இதற்கு முன் வந்த சூபிகள் தொடரும் அருமை.

இன்று வந்த நாளிதழிலில் வந்துள்ள கட்டுரைக் கீழே:

போருக்குப் போகும் தளபதியிடம் என்ன உயர்ந்த கட்டளைகள் விடுகிறார் பாருங்கள்!

//
* உண்மையாக இரு
* யாரையும் ஏமாற்றாதே, யாரையும் சிதைக்காதே
* வயதானவர்கள், பெண்கள், குழந்தைகளை கொள்ளாதே
* பேரிச்சை, பனைகளை எரிக்காதே
* பழ மரங்களை வெட்டாதே
* உணவுக்காக அன்றி வேறு எதற்காகவும் விலங்குகளை வெட்டாதே
* மடாலயங்களில் துறவிகளை எதிர்கொள்ளலாம், அவர்களை எதுவும் செய்யாதே
* எதிரிகளின் தலைவர்களிடம் மரியாதையாக நடந்துகொள்
* எப்போதும் அல்லாவுக்கு பயப்படு
என்று உஸாமாவிடம் அபூபக்கர் சொன்னார்

//

கலீஃபாக்கள் சரிதம் - இந்து தமிழ் திசை - நஃப்பீஸ் கான்
கலீஃபாக்கள் சரிதம் – இந்து தமிழ் திசை – நஃப்பீஸ் கான்

#islam #prophet #tamil #thehindu #newspaper #article

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.