எங்கும் உள்ளது சுவாரஸ்யமான உரையாடல், நாம் கேட்க தயாரானால் மட்டும்:

நேற்று பல்லாவரத்திலிருந்து மாம்பலத்திற்கு டாக்ஸியில் வந்துக் கொண்டிருந்தேன், மீனம்பாக்கம் விமான நிலைய ஓடுதளத்தின் வெளியே, சாலையில் ஒரே கூட்டம் – ஆண்களும், பெண்களும், ஒன்றிரண்டு குழந்தைகள் கூட, அண்ணாந்து எதையோ வெடிக்கைப் பார்த்தப்படி. சிலப்பல மோட்டர் பைக்களும், ஒன்றிண்டு கார்களும் நிறத்தப்பட்டு இருந்ததால் நெரிசல். என்னவென்று பார்த்தால் ஒரு ‘கேத்தே பெசிவிக்’ கார்கோ விமானம் தரையிரங்கிக் கொண்டிருக்கிறது, அவ்வளவு தான்.

ஊபர் டாக்ஸி டிரைவர் (Uber Driver) கோபமாகிவிட்டார் “என்ன சார் இது, பைத்தியக்கார ஜனங்க, எதுக்குன்னாலும் வெடிக்கைப் பார்க்கிறாங்க. அப்படி என்னதா தான் பார்க்கிறாங்க?, முன்னப்பின்ன ப்லேனையே பார்த்ததில்லையான?. இதல்லாம் ஒரு மேட்டரே இல்லை சார். ஊர்ல வயக்காட்டுல வேலை செய்யும் போது எப்போதாவது ஒரு ப்லேனை (Aeroplane) பார்த்த நினைப்பு இன்னும். இவங்களுக்கு வசதியா, கவண்மெண்டே ஒரு பார்வையாளர் மேடையமைச்சு, அதுக்கு டிக்கெட் வாங்கலாம். பாப்கானும், பானிப்புரியும் கூட விக்கலாம்.

இங்கப்பாருங்க ஆடி க்யு 7 (Audi Q7) கார் முன்னலா, அது வெலையே எண்பது தொண்ணூறு லட்சம், 3000சிசி இஞ்சின் அதுல, அந்த வேகம் போற ரோடு நம்ம ஊர்ல இருக்கா?, இதுக்கெல்லாம் பார்மிஷனே கொடுக்கக்கூடாது. வண்டி நம்பர பாருங்க, பாண்டிச்சேரி ரேஜிஸ்ட்ரஷேன், ஆனா ஓடறது சென்னையா தான் இருக்கும். என்னத சொல்ல?” என அவர் முடிக்கும் முன் என் வீடு வந்துவிட்டது.

Categorized in:

Tagged in: