இந்த Masala Padam (மசாலா படம்) படத்தை பற்றி தவறாக எதுவும் சொல்ல மாட்டேன். நமக்கு ஏன் படம் எடுத்த தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா மீது பொல்லாப்பு?. படத்தின் ஆரம்பத்திலேயே படத்தைக் கிண்டல் பண்ணிக் கலாய்க்கும் வலைப்பூ விமர்சகர் ஒருவர் தாக்கப்படுகிறார், ஒரு முறை சொன்னாலே நான் புரிந்து கொண்டுவிடுவேன்.

இந்தப் படத்தை பாபி சிம்ஹாவை எதிர்பார்த்தோ அல்லது RJசிவாவை  எதிர்பார்த்தோ செல்லக் கூடாது, அவர்கள் இருவரும் வருகிறார்கள், ஆனால் இது அவர்களைப் பற்றிய படமில்லை. வலைப்பூ விமர்சகர்கள் நால்வர், அவர்களின் தோழி இவர்களுக்கும் ஒரு வணிக தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஒருவருக்கும் நடக்கும் பந்தயம் தான் கதை. மசாலா விசயங்களையும் சலிப்பு தரும் காட்சிகளையும், தொப்புள் நாயகிகளையும் கலைந்து ஒரு தரமான தமிழ் சினிமா எங்களால் தர முடியும் எனக் கிளம்புகிறது இந்த ஐவர் குழு. இவர்களுக்கு உதவத் தோழியின் சிநேகிதியாக வரும் படத்தின் நாயகி தியா (லக்ஷ்மி தேவி) முன்வருகிறார், கற்பனை இல்லாமல் உண்மை மனிதர்கள் மூவரைத் தேர்ந்தெடுத்து அவர்களைக் காதலிக்க/சிநேகம் பிடிக்கிறார் அவர். அந்த மூவர் தான்  RJசிவா, பாபி சிம்ஹா மற்றும் கௌரவ்.  

எத்தனை முறை தான் மேல் தட்டு வர்க்கத்தின் அடையாளமான காபியையே டி.வி. நிகழ்ச்சிகளில் பார்ப்பது, தமிழர்களின் பாரம்பரிய உணவுகளைச் சிறப்பிக்கும்படி நிகழ்ச்சி ஒன்றின் பெயர் “உம்மா with சப்னா” என வருவது நல்ல கற்பனை. 98.3 Radio Mirchi வெட்டிப்பேச்சு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக வரும் இளைஞர் அபார வேகத்தில் நிஜத்தில் வருவது போலவே பேசுகிறார், அவர் உண்மையிலேயே Mirchi RJவாக இருக்கலாம், நல்ல தேர்வு. படத்தில் வரும் சில வசனங்கள் ரசிக்கும்படி இருந்தது, உதாரணமாக “சினிமாவில் இரண்டு வகை தான், ஒன்று பார்வையாளனின் சினிமா, மற்றொன்று இயக்குநரின் சினிமா (one is viewers cinema, other is directors cinema)”.

பாபி சிம்ஹா இதிலும் ஒரு ரௌடி என்றவுடன் நீங்கள் சித்தார்த் நடித்த ஜிகிர்தண்டா உங்கள் நினைவில் வந்தால் இயக்குநர் லக்ஷ்மன் குமார் பொறுப்பில்லை. படம் நெடுக  PowerPoint Titleslide போல அவ்வப்பொழுது லேகியம் விற்பனை கடையில் மாட்டி இருக்கும் மனித உடல்கூறுகளைக் காட்டும் படம் போல ஒரு ஓவியம் வருகிறது. எதற்கு?. படத்தின் முதலில் கமர்ஷியல் படங்களைப் பற்றிப் பல கிண்டல் வசனங்கள் வருகிறது, அதை நாம் மறக்கக்கூடாது என்று இயக்குநர் நமக்கு விரிவாக விளக்கும் படம் தான் மசாலா படம், பெயருக்கு ஏற்றப் படம்! நன்றி.

மசாலா படம் (2015)

மசாலா படம் (2015)

Categorized in:

Tagged in:

, ,