நான் பல ஆண்டுகளுக்கு முன்பு, காஞ்சி கைலாசநாதர் திருக்கோயில் (Kanchi Kailasanathar temple) சென்றிருக்கிறேன்; தொன்மையான கட்டிடம் என்றாலும், இன்றும் பூஜைகள் நடக்கும் ஒரு திருக்கோயில்.

“கல்லில் ஓர் கவிதை – காஞ்சி கைலாசநாதர் கோவில்” என்னும் தலைப்பில் ( திரு. R. கோபு (R.Gopu) அவர்கள், இன்று தமிழ் இணையக் கழகத்தின் மாதாந்திர தொடர் சொற்பொழிவின் முதல் சொற்பொழிவாற்றுகிறார் என்று தெரிந்ததும் இங்கு வர நாட்காட்டியில் குறித்துக் கொண்டுவிட்டேன்.

தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மாண்புமிகு முக்கூர் திரு. என். சுப்பிரமணியன் அவர்கள்; தமிழ் பாரம்பரியம், கலை மற்றும் பண்பாடு பற்றிய மாதாந்திர தொடர் சொற்பொழிவைத் தொடங்கி வைத்தார்கள். கோயில் எப்படித் தோன்றியது, அதைக் கட்டிய பல்லவ அரசனான ராஜசிம்ம வர்மனனைப் பற்றியும், அவனது வீர தீரப் பிரதாபங்களைப் பற்றியும்; கோயிலின் அமைப்பைப் பற்றியும் திரு.கோபு மிக அருமையான ஒரு உரையை நிகழ்த்தினார். “கோயிலுக்கு அவன் வைத்த பெயர் ஶ்ரீ ராஜசிம்ம பல்லவேஷ்வரம்”; “அத்தீந்தகாம பல்லவேஷ்வர கிரஹம்” (அளவில்லாத ஆசைகளுடைய பல்லவனால் பூஜிக்கப்பட்ட ஈஸ்வரனின் கோயில்). என்ன ஒரு பேச்சு?. கேட்போரை, அதுவும் ஒரு சரித்திரத் தொல்லியல் பற்றிய பேச்சில் கட்டிப்போடுவது என்பது சுலபமில்லை. அதை கோபு எளிதாகச் செய்தார், இந்தத் தலைப்பில் அவரின் கடின உழைப்பை அது தெளிவாகக் காட்டியது. பாராட்டுகள்.

ஏறக்குறைய குறித்த நேரத்தில் ஆரம்பித்ததும், முடித்ததும், மேலும் ஒரு சிறப்பு. நம் ஊர் நிகழ்ச்சிகளில், அதுவும் ஓர் அமைச்சர் வந்த நிகழ்ச்சியில் நேரம் கடைப்பிடிக்கப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். பேச்சின் முழு ஒளிப்பதிவு கீழேயுள்ளது, கேட்டுப் பல விசயங்களை நாம் தெரிந்து கொள்ளலாம்.

கல்லில் ஓர் கவிதை – காஞ்சி கைலாசநாதர் கோவில்

கல்லில் ஓர் கவிதை – காஞ்சி கைலாசநாதர் கோவில்

கோயிலின் பெயர்கள் - பல்லவர் காலத்தில் "ஸ்ரீ ராஜ்சிம்ம பல்லவேஷ்வரம்"

கோயிலின் பெயர்கள் – பல்லவர் காலத்தில் “ஸ்ரீ ராஜ்சிம்ம பல்லவேஷ்வரம்”

 

கோயிலின் அபூர்வங்கள்

கோயிலின் அபூர்வங்கள்

Categorized in:

Tagged in:

,