தமிழ்

Taha Muhammad Ali poem

இன்று தமிழ் த இந்துவில்  உருக்கமான ஒரு கவிதையைப் படித்தேன். இப்போது காஸா (பாலஸ்தீன) இஸ்ரேல் சண்டை நடந்துக் கொண்டிருக்கும் போது, அப்பாவி உயிர்கள் அழிக்கப்படும் காட்சிகளை படித்து/பார்த்து ஒன்றுமே செய்யமுடியாமல் பிரார்த்தனை மட்டுமே செய்து (வருந்திக்) கொண்டிருக்கும் போது இந்த கவிதை மயிலிறகால் மனதை வருடியது போல் இருந்தது.

கவிதையின் தலைப்பு “பழிக்குப் பழி” எழுதியது பாலஸ்தீனத்து பிரபல எழுத்தாளர் திரு.தாஹா முகம்மது அலி (1931-2011) அவர்கள்.

 

சில சமயங்களில்… நான் ஆசைப்படுவதுண்டு…

என் அப்பாவைக் கொன்று எங்கள் வீட்டைத் தரைமட்டமாக்கி

குறுகலானதொரு நிலத்துக்குள் என்னை விரட்டிய

அந்த மனிதனை ஒரு துவந்த யுத்தத்தில் நேருக்கு நேர் சந்திக்க வேண்டுமென்று

சில நேரங்களில் நான் ஆசைப்படுவதுண்டு.

 

அந்தச் சண்டையில் அவன் என்னைக் கொன்றுவிடுவான் எனில்

நான் ஒருவழியாக நிரந்தர அமைதியில் ஆழ்ந்துவிடுவேன்…

இல்லையெனில், அவனைப் பழிவாங்கத் தயாராகிவிடுவேன்.

 

ஆனால், துவந்த யுத்தத்தில் என்னுடைய எதிரியை எதிர்கொள்ளும் போது

அவனுக்காக வீட்டில் அவனுடைய அம்மா காத்துக்கொண்டிருப்பாள் என்பதோ,

குறித்த நேரத்தில் வராமல்கால்மணி நேரம் தாமதித்தாலும்,

தன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு காத்திருக்கும்

தந்தை ஒருவர் இருப்பார் என்பதோ எனக்குப் புலப்பட்டால்

நான் நிச்சயம் அவனைக் கொல்ல மாட்டேன், என்னால் முடிந்தால்கூட.

முழு கவிதையும் இங்கே (தமிழ் தி இந்து பக்கம்), ஆங்கிலத்தில் இங்கே.