Manmadan Ambu (மன்மதன் அம்பு), ரொம்ப நாட்களுக்குப் பின் தமிழில் ரசிக்கும்படியாக ஒரு முழுநீள நகைச்சுவைப் படத்தை கொடுத்ததற்கு இயக்குனர் கே.ஸ்.ரவிக்குமாரைப் பாராட்ட வேண்டும். படம் வந்து பல மாதங்கள் ஆனாலும் இன்று தான் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது, படத்தைப் பற்றி பலர் (கேபிள் சங்கரின் விவரமானப் பதிவு இங்கே) எழுதிவிட்டதால் என் கருத்து சுருக்கமாக கீழே.

படத்தின் முதல் காட்சியிலிருந்து காமெடியும் ஆரம்பித்துவிடுகிறது, குறிப்பாக கடைசிக்காட்சிகளில் சிரித்து சிரித்து எனக்கும் மனைவிக்கும் வயிறே வலித்துவிட்டது.  கமல் (Kamal Hasan), த்ரிஷாவை (Trisha Krishnan) விட சங்கீதாவின் நடிப்பு தான் அபாரம் – மிக இயல்பாக தனது பாத்திரத்தை செய்துள்ளார். கப்பல் காட்சிகள் கண்ணுக்கு குளிமை, இத்தாலியின் ரோம் மற்றும் வெணிஸ் நகரங்களை தமிழ் ரசிகர்களுக்கு அழகாக கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் மனுஷ் நந்தன். குட்டிப் பையன் நிஜமாகவே தூங்கிட்டான என அறிய, சங்கீதா (பையனின் அம்மா) சொல்லும் பொய்யான பரிட்சை நல்ல சிரிப்பு. கமலின் பழைய நினைவுகள் (ராணுவத்தில் மீட்பு, காதல், கல்யாணம்) ஒரே பாடலில் அழகாக சொல்லப்பட்டுள்ளது, அதுவும் அந்த Reverse-Play காட்சிகள்  மிக நேர்த்தி.

மொத்தத்தில் ஒரு நல்ல பொழுதுப்போக்கானப் படம் – எதுவும் யோசிக்காமல் பார்த்து ரசிக்கலாம், சிரிக்கலாம்.

Manmadan Ambu (மன்மதன் அம்பு)

Manmadan Ambu (மன்மதன் அம்பு)

Categorized in:

Tagged in:

,