ஏற்கனவே ஏ.ஐ.யைப் பயன்படுத்தி மாணவர்கள் தங்களுக்குப் புதிய விஷயங்களை எளிதாக விளங்கிக்கொள்ளும் அளவிற்கு படிப்படியாக வழங்கச் சொல்லிப் புரிந்துகொள்கிறார்கள். இன்றைக்குக் கூகுள் நிறுவனத்தினர் அவர்களது ஜெமினி ஏ.ஐ. மாதிரியில் எஸ்.ஏ.டி (SAT) தேர்விற்கு ஒரு வசதியை வழங்கியிருக்கிறார்கள். இது மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என நம்புகிறேன்.
இந்தியாவில் இருந்தும் உலகின் பல நாடுகளில் இருந்தும், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்குப் பள்ளி மாணவர்கள் மேல்படிப்பிற்காகச் செல்வதைக் குறிக்கோளாக வைத்துள்ளார்கள். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் நுழைய முக்கியமான ஒரு தேர்ச்சித் தேர்வு எஸ்.ஏ.டி.
இந்தத் தேர்விற்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள மாணவர்கள் சில ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு இலட்சம் வரை கூடச் செலவு செய்கிறார்கள் எனக் கேள்விப்பட்டுள்ளேன். இதற்காகப் படிப்பதோடு மட்டுமில்லாமல், எஸ்.ஏ.டி மாதிரித் தேர்வுகளைப் பலமுறை எடுத்துக்கொண்டு உங்களை நீங்களே தயார்படுத்திக்கொள்வது மிக முக்கியம்.
இன்றைக்குக் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள ஜெமினி பதிப்பில், இந்த எஸ்.ஏ.டி மாதிரித் தேர்வுகளை எத்தனை முறை வேண்டுமானாலும் இலவசமாக மாணவர்கள் எடுத்துக்கொள்ளலாம். இந்த மாதிரித் தேர்வுகளில் கேள்விகள் வருவதோடு, நீங்கள் அளிக்கும் விடையைக் கணக்கிட்டு உங்களது மதிப்பையும் ஜெமினி வழங்குகிறது. அதோடு நீங்கள் தவறாக விடையளித்திருந்தால் என்ன தவறு செய்தீர்கள், சரியான விடை என்ன என்பதையும் அது விளக்குகிறது.
உங்கள் வீட்டில் மாணவர்கள் இருந்தால் இந்த வசதியைப் பற்றி அவர்களிடம் சொல்லவும். குறிப்பாக வசதி குறைவாக உள்ள மாணவர்களின் அமெரிக்கக் கனவிற்கு ஒரு படி அருகே அழைத்துச் செல்ல இது பயன்படும்.



குறிப்பு: “எஸ்.ஏ.டி”யோடு நில்லாமல் பிற தரப்படுத்தப்பட்டத் தேர்வுகளுக்கும் (Standardized Tests) இது போன்ற வசதியை ஜெமினியில் வழங்கப்போகிறோம் என்று கூகுள் நிறுவனத்தினர் சொல்லியுள்ளார்கள். அவர்களது முயற்சியை வரவேற்போம்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

other companies who provide at cost as service will get impacted with this
Yes. That’s capitalism and the way of Big Tech, sadly.