அழிந்துவருகிறது என்று சொல்லப்பட்ட பத்திரிகைத் துறையில் கால்பதிக்க முடிவு செய்தார்கள் அந்த இருவரும். விளையாட்டு (ஸ்போர்ட்ஸ்) செய்திகளை மட்டுமே எழுதுவோம் என்றார்கள். எங்கள் தளத்திலும் செயலியிலும் விளம்பரங்கள் எதுவும் கிடையாது, சந்தா கட்டித்தான் படிக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இருவருக்கும் பத்திரிகைத் துறையிலோ எழுத்துலகிலோ எந்தவித அனுபவமும் இல்லை. இருந்தும், தொடங்கிய நான்கே ஆண்டுகளில் பத்து லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்களைப் பெற்றுள்ளார்கள்.

அவர்கள் அலெக்ஸ் மேதர் (Alex Mather), ஆடம் ஹான்ஸ்மான் (Adam Hansmann) என்ற இருவர். இவர்களால் 2016ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்டது தி அத்லெடிக் (The Athletic). இது டிஜிட்டல் தயாரிப்பாக வடிவமைக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் செய்தித்தளம். முதன்முதலில் சிகாகோ நகரின் பிரபல விளையாட்டு அணியின் செய்திகளை மட்டும் வெளியிட்டார்கள். அந்நகர வாசகர்களின் அன்பைப் பெற்றவர்கள், அமெரிக்கா முழுவதிலும் இருக்கும் பெரிய அணிகளில் தொடங்கி, பல சிறிய அணிகளின் செய்திகளையும், அவர்கள் விளையாடும் போட்டிகளைப் பற்றியும் எழுதினார்கள்.

இன்று அமெரிக்காவில் பிரபலமாக இருக்கும் பல ஆண்கள், பெண்கள் விளையாட்டுகளைப் பற்றி தி அத்லெடிக்கில் படிக்கலாம். கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து, பேஸ்பால், சைக்கிளிங், கார் ரேசிங், கல்லூரிப் போட்டிகள் என அனைத்தும் இங்கே இருக்கின்றன. அமெரிக்காவைத் தாண்டி, இந்தியா உள்பட உலக நாடுகளில் அதிகமானோர் பார்க்கும் இங்கிலீஷ் பிரிமியர் லீக் போட்டிகளும் தி அத்லெடிக் பத்திரிகையில் இருக்கின்றன. இதில் ஒவ்வொரு விளையாட்டிலும் இருக்கும் அணிகளைப் பற்றியும், தற்போது நடக்கும் போட்டியைப் பற்றியும் துல்லியமான புள்ளிவிவரங்கள் கிடைக்கும்.

தி அத்லெடிக்கின் கூடுதல் சிறப்பு, இவர்கள் செயலியில் இருக்கும் பயனர்களுக்கான அரட்டை வசதி. ஒவ்வொரு போட்டி நடக்கும்போதும் ரசிகர்கள் தங்கள் அணிகள் சார்ந்து தங்களுக்குள் நிகழ்நேரத்தில் அரட்டை அடிக்க முடியும். ஒவ்வொரு அணியின் ரசிகர்களும் பிரித்து வைக்கப்படுவதால் மோதல்கள் குறைகின்றன. மற்ற இணையதளங்களில் இருப்பது போல, ஒவ்வொரு செய்தியின் கீழும் கருத்திட முடியும்.

தொடர்ந்து படிக்க, மெட்ராஸ் பேப்பர் முகவரியைத் தொடரவும்.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading