Google NotebookLM இப்போது தமிழிலும் பேசுகிறது!

இன்றைக்குக் கூகுள் அவர்களின் NotebookLM இயற்றறிவு தளத்தில் ஒரு புது வசதியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஏற்கனவே இந்தத் தளத்தில் தமிழ் உட்படப் பல மொழியில் தரவுகளைக் கொடுத்தால் அதிலிருந்து கேள்விகளைக் கேட்க முடியும். Mind Map வரையச் சொல்ல முடியும். தரவைப் பற்றி இருவர் பேசிக் கொள்ளும் கலந்துரையாடல் போல ஒரு Podcast ஒலிப்பதிவை உருவாக்கிக் கொடுக்கச் சொல்ல முடியும். ஆனால் கொடுக்கப்பட்ட புத்தகம் தமிழில் இருந்தாலும், இதுவரை கலந்துரையாடல் ஆங்கிலத்திலேயே வரும். இன்று (1 மே 2025) முதல் உலக மொழிகளில் ஐம்பதுக்கும் அதிகமான மொழியில் கேட்க முடியும், தமிழ் உட்பட.

இந்தத் தளத்தில் எனது நுட்பம் நூலைக் கொடுத்து அதைப் பற்றி இருவர் பேசிக் கொள்ளும் கலந்துரையாடலைக் கேட்டேன். எப்படி வந்திருக்கிறது என்று நீங்களே கேளுங்களேன்!

சோதனை முயற்சி – 1: இது முதல் முயற்சி.

சோதனை முயற்சி – 2: இரண்டாவது சோதனை முயற்சி கீழே. இதில் “நுட்பம்” சரியாக உச்சரிக்கப்படுகிறது – அதற்கு நான் தனியாக பிராம்ப்ட் கொடுத்தேன்.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading