இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கை வெளியீட்டின் போது இந்த நூல் வெளியிடப்பட்டது. “தமிழ் நிதி நிர்வாகம்”, தொன்மையும் தொடர்ச்சியும் என்கிற இந்த நூல் ஒரு வரலாற்றுப் பொக்கிஷம். சங்க காலத்திலிருந்து இன்று வரையிலான நிதி வரலாறு இதில் இருக்கிறது. வெளியிட்ட போதே இணையத்தில் பரவலாகச் சில பக்கங்களைப் படித்தேன். இன்று தமிழ் இணையக் கல்விக்கழகத்தில், குழு சந்திப்புக்குச் சென்ற போது இணை இயக்குநர் திரு ரெ கோமகன் அவர்கள் நூலின் அட்டைப் பதிப்பை எனக்கு அளித்தார்.

உயர் தரத்திலான காகிதத்தில், மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த நூல். உள்ளே இருக்கும் விசயத்தைப் போலவே, புத்தகமும் கனமாக இருக்கிறது. இந்தளவு சிறந்த வடிவமைப்பிலான நூல் தமிழில், அதுவும் அரசிடமிருந்து வருவது அரிது, இந்த வாய்ப்பைக் கல்வியாளர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த நூலை இலவசமாகத் தரவிறக்க, தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மின்னூலகத்தில் “தமிழர் நிதி நிர்வாகம் தொன்மையும் தொடர்ச்சியும்” என்று தேடவும்.

தமிழ் நிதி நிர்வாகம், தொன்மையும் தொடர்ச்சியும்
தமிழ் நிதி நிர்வாகம், தொன்மையும் தொடர்ச்சியும்

தமிழ்நாடு அரசுக்கு நன்றி. இணை இயக்குநர் திரு கோமகன் அவர்களுக்கும் நன்றி.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

One thought on “தமிழ் நிதி நிர்வாகம், தொன்மையும் தொடர்ச்சியும்”

Leave a Reply to SivamuruganCancel reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading