மெட்ராஸ் பேப்பரில் வெளிவந்து அன்பைப் பெற்ற எனது ‘நுட்பம்’ தொடரைத் தொடர்ந்து நேற்று முதல் எனது புதிய தொடர் ஆரம்பம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் செயலிகள், இணையத்தளங்களை யார் தொடங்கினார்கள், எப்படி உருவாக்கினார்கள், அவர்களின் கதை என்ன என்பதை இந்த புதுத் தொடரில் பார்க்கப் போகிறோம். இந்தச் சாதனையாளர்களைப் பற்றி ஆராய்ச்சிச் செய்து தெரிந்து கொள்ளும் விசயங்கள் உற்சாகமாக இருக்கிறது.

கதைகளைத் தாண்டி இந்தச் செயலிகள் எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது, எப்படி வேலைச் செய்கிறது, அவற்றில் உள்ள சூட்சமங்கள் என்ன என்பதைப் பற்றியும் ஓரிரு வரிகளில் காண்போம். பலரும் படிக்க விரும்பும் வகையில் எளிமையான கொடுக்க முயல்கிறேன். உங்களின் ஆசிகளை வேண்டி வரத் தொடங்கியுள்ளது செயலிகளின் கதைகள் தொடர்.

முதல் அத்தியாயம் ‘வாட்ஸ்அப்: வாழ்விலோர் அங்கம்’. யூதரான யான் கோம் என்பவரைப் பற்றிய கதை, இலவசமாகவே வழங்கப்படும் ‘வாட்ஸ்அப்’பின் கதை. பேஸ்புக் வாங்கி பத்தாண்டுகள் ஆகியும் தொடர்ந்து முன்னணியில் இருக்கிற காரணம் என்ன, தெரிந்து கொள்ள மெட்ராஸ் பேப்பரைப் படிக்கவும்.

எனக்குக் கதை சொல்லத் தெரியாது என்று எவ்வளவு சொல்லியும் என்னை எழுத வைத்துள்ள ஆசிரியர் திரு பா.ரா. அவர்களுக்கு என் நன்றி.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading