இப்போது வந்து கொண்டிருக்கும் புது வித ஏமாற்றுவேலை இது. உடனே இந்த எண்ணை வாட்ஸ்-ஆப்பில் இருக்கும் “Block and Report” என்கிற வசதியை அழுத்தி புகார் அளிக்கவும். நம்மூர் மின்சாரத் துறை, அரசாங்கத் துறை அவர்கள் இப்படியெல்லாம் செய்ய மாட்டார்கள், அமைச்சர்கூட சமீபத்தில் இது போன்ற புரளிக்கு ஏமாற வேண்டாம், நாங்கள் இப்படியெல்லாம் செய்ய மாட்டோம் என்று சொல்லியிருக்கிறார். மின்சாரத் துறையிலிருந்து வரும் குறுஞ்செய்திகள் **-TANGED என்கிற எண்ணிலிருந்து மட்டுமே வரும், இதில் ** என்பது AD, AX போன்ற ஏதாவது இரண்டு ஆங்கில எழுத்துக்களாக இருக்கும் – இது தொலைத்தொடர்புத் துறையில் பயன்படுத்தும் குறியீடுகள். வேறு எண்ணிலிருந்துவரும் செய்திகள் அனைத்தும் போலி. அப்படியே இது உண்மையாக இருந்தாலும், எந்தக் குடியும் முழுகாது, உடனே அருகில் இருக்கும் மின்சார அலுவலகம் சென்று பணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம் – நம்முடைய பயமும், பதற்றமும் தான் இவர்களின் முதலீடு, அதை நினைவில் கொள்ளவும்.

தயவு செய்து இவர்கள் கொடுக்கும் எண்ணுக்கு அழைத்துப் பேசுவதோ, அல்லது திரும்பப் பதில் எழுதுவதோ வேண்டாம் – அது அவர்களுக்கு உங்களின் எண்ணை உறுதி செய்ய வசதியாக இருக்கும், தெரியாமல் அழைத்திருந்தால் அதோடு நிறுத்திக் கொள்ளவும். அவர்களுக்கு ஏதாவது தகவலே, பணமோ கொடுத்திருந்தால் காவல் துறையின் Cyber-cellக்கு புகார் அளிக்கலாம்.

Fraud message claiming to be Electricity office
Fraud message claiming to be Electricity office

Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading