Delicious

சில தினங்களுக்கு முன் முகநூலில் நண்பர் ஒருவர், நாம் பார்த்து ரசித்த பழைய படங்களைப் பற்றிப் பதிவு செய்யுமாறு கேட்டிருந்தார், அதில் எனக்குத் இன்று தோன்றிய ஒரு படம் ரஜினி (Rajnikanth) இரட்டை வேடத்தில் நடித்த தில்லு முல்லு (1981). மீண்டும் அந்தப் படத்தை இன்று பார்த்தேன்.

நான் பலமுறை பார்த்து மகிழ்ந்து சிரித்த படம் இது. ரஜினி தனது முதலாளியை (“தேங்காய் சீனிவாசன்”) இரட்டை வேடம் போட்டு ஏமாற்றுவதுதான் கதை, இந்தியில் வந்த கோல்மால் படத்தைத் தழுவி தமிழில் இயக்குனர் சிகரம் “கே பாலச்சந்தர்” (K Balachander) அவர்களால் எடுக்கப்பட்ட படம். இதில் விசு (Visu) அவர்களின் நேர்த்தியான வசனங்கள், எல்லோரையும் நிச்சயம் சிரிக்க வைக்கும். “தேங்காய் சீனிவாசன்” மற்றும் “சௌகார் ஜானகி” அவர்களின் நடிப்பு அபாரம்.

தில்லு முல்லு (1981)

இந்தப் படத்தில் இருந்து நகைச்சுவை மட்டுமில்லாமல், நான் எடுத்துக்கொண்ட ஒரு வாழ்க்கை பாடமும் உண்டு. வேலைக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் நேர்காணல் நடந்து கொண்டிருக்கும், அதில் பலரை கேள்வி கேட்டு யாரும் உருப்படியாகப் பதில் சொல்லாமல் போய்விடுவதால், கோவம் கொண்டிருக்கும் தேங்காய் ஸ்ரீனிவாசன் அவரின் மேலாளராகப் பக்கிரிசாமி என்ற பாத்திரத்தில் வருபரை கேள்வி கேட்க சொல்லுவார். அவரும் வரும் ஓர் இளைஞனிடம் மிகச் சுலபமான கேள்விகள் கேட்பார்-எந்த திரையரங்கில் எப்போது படங்கள் ஓடும், Wills சிகரெட், Scissors சிகரெட் பாக்கெட்டின் விலை எவ்வளவு என்று முட்டாள் தனமான கேள்விகளைக் கேட்டுவிட்டு, தேங்காய் ஸ்ரீனிவாசன் இடம் திரும்பி கூறுவார்:

இந்தக் காலத்து இளைஞர்கள் பாவம் எவ்வளவோ கஷ்டங்களுக்கு மத்தியில் படிக்கிறாங்க, அவங்களை safeஆ இவ்வளவு தான் கேட்கலாம், இவ்வளவு தான் கேட்கனும், இவ்வளவு கேட்கிறது தான் better

மேலாளர் பக்கிரிசாமி

இதிலிருந்து நாம் ஒரு பாடத்தை எடுத்துக்கொள்ளலாம் ஒவ்வொரு தலைமுறையும் அடுத்தத் தலைமுறையினர் வாழ்க்கையைச் சுலபமாக எடுத்துக் கொள்கிறார்கள் என நினைக்கிறார்கள். அது அப்படியில்லை, ஒவ்வொரு தலைமுறைக்கும் அவர்களுக்கே உண்டான சிரமங்கள் இருக்கிறது, அதைப் பெற்றோரும் மற்றோரும் புரிந்து அவர்களை நடத்தினால் சமுதாயத்திற்கு நல்லது.

கண்டிப்பாக இந்தப் படத்தைப் பார்த்து ரசியுங்கள். இதே தலைப்பில் 2013இல் ஆர்.ஜே.சிவா நடித்துப் புதிய பதிப்பு வந்தது, அது இந்த அளவிற்கு இல்லை, இந்த மாதிரி சிறப்பான படங்களை அப்படியே விட்டுவிடுவது தான் சினிமாவிற்கு நல்லது!

Categorized in:

Tagged in:

, ,