
Jilla (2014)
Jilla (ஜில்லா) – விஜய் (Vijay) மற்றும் மலையாள நடிகர் மோகன்லால் (Mohanlal) நடித்துள்ளப் புதிய படம். இன்று என் பையனுடன் சத்யம் திரையரங்கில் பார்த்தேன். என் பத்து வயது பையனுக்குப் படம் பிடித்துவிட்டது, வீடு திரும்புகையில் வண்டியில் ஒரே ஆட்டம். எனக்கு ஏண்டா நேரத்தை வீணடித்தோம் என்று சிந்தனை!
காஜல் அகர்வாலை (Kajal Aggarwal) சாலையில் பார்த்தவுடன் பிடித்துவிட விஜய் தன் சகோதரன், சகோதரி, நண்பர்களுடன் காஜல் வீட்டிற்குச் சென்று பெண் பார்க்கும் காட்சி நல்ல நகைச்சுவை.
நான் விஜய்யிடம் இன்னும் நல்லதாக எதிர்பார்த்தேன், இந்தப் படத்திற்கு தலைவா மேல்!


