Movie Review,  தமிழ்

Theeya Velai Seiyyanum Kumaru (2013)

தமிழ் இணைய மாநாட்டிற்காக மலேசியா வந்தயிடத்தில் மாலையில் பொழுது போகாமல் கொண்டுவந்திருந்த இந்தப் படத்தைப் பார்த்தேன்.  தீயா வேலை செய்யணும் குமாரு, இயக்குனர் சுந்தர்.சி (Sundar C)மற்றும்  சந்தானம் (Santhanam) கூட்டணியில் ஜூனில் வந்த படம். தமிழில் பல வருடங்களுக்கு பிறகு (இப்போது இந்திப்படப் புகழ்) சித்தார்த் மற்றும் தமிழகத்தின் கனவு கன்னி ஹன்சிகா நடித்துள்ள இந்தப் படம் முழுநீள நகைச்சுவைப் படம். காரணம், காரியம் அகியவற்றைப் பற்றி யோசிக்காமல் பார்த்தால் சிரிக்கலாம்.

படத்தின் கதாநாயகன் நிச்சயம் சந்தானம் தான் –ஹீரோவும் அவர்தான் வில்லனும் அவர்தான். மனிதர் கலக்குகிறார். கிரேடிட் கார்டு தேய்க்கும் கருவியை நீட்டும் இடங்கள் சிரிக்கும்படி ரசிக்கும்படி இருந்தது. ஐ.டி.நிறுவனக்காட்சிகள் நம்பும்படி இல்லை, மிகவும் மிகையாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர். எப்போதும் போல வந்து போகிறார் ஹன்சிகா, அவ்வளவு தான். சித்தார்த்திடம் நான் நிறைய எதிர்ப்பார்த்தேன், ஒரு தீயையும் காணோம் குமாரு, நீங்கே பம்பாயிலேயே இருங்கள், நன்றி.

மொத்ததில் பார்க்கலாம், கொஞ்சம் சிரிக்கலாம்.