விஜய் நடித்து தீபாவளிக்கு வெளிவந்துள்ள ஆக்‌ஷன் படம் – துப்பாக்கி (Thuppaki). என் பையன் ஒரு விஜய் விசிறி அதனால் இவ்வளவு சீக்கிரம் (இன்று) இந்தப் படத்திற்கு அழைத்து வந்தேன்.

வழக்கமான விஜய் (Vijay) படம் என்றாலும்  கதையின் ஓட்டமும், பம்பாய் நகரத்து காட்சிகளும் படத்தைக் காப்பாற்றி விடுகிறது. கதையில் நிறைய ஓட்டைகள், ரமணாவை எடுத்த ஏ. ஆர். முருகதாஸ் (AR Murugadoss) தான் இயக்குனர் என்றால் நம்பமுடியவில்லை, படம் மோசமில்லை அவ்வளவு தான்.  படம் முடியும் வரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை, கதையில் பெரிதாக விஜய் ஏதோ செய்ய போகிறார் என்ற உணர்வில் நான் ஏமாந்து போனேம்.

ஹாரிஸ் ஜெயராஜ் (Harris Jayaraj) இசையாமே?,  கூகுள், கூகுள் பாடலைத் தவிர வேறு ஏதுவுமில்லை. காஜல் அகர்வால் (Kajal Aggarwal) எதற்கு வருகிறார் என்றே தெரியவில்லை. நல்ல நடிகரான ஜெயராமுக்கு ஒரு மொக்கை பாத்திரம். சத்யனுக்கு நல்ல வாய்ப்பு, அதை நன்றாகப் பயன்படுத்தியுள்ளார்.

thuppaki

துப்பாக்கி – பார்க்கலாம்!

Categorized in:

Tagged in:

,