அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறேன். நம்பவே முடியவில்லை. கணியரசு ஆண்டோ பீட்டர் இனி இவ்வுலகில் இல்லையாம். 15 ஆண்டுகளுக்கு மேலாக எனக்கு அவரை தெரியும், நல்ல நண்பர். நான் உத்தமத்தின் பொறுப்பில் இருந்தப் போது பல தமிழ் கணினி நிகழ்ச்சிகளை நடத்த எனக்கு கேட்காமலேயே உதவி செய்துள்ளார்.   குறிப்பாக செம்மொழி மாநாடோடு இனைந்து நடந்த தமிழ் இணைய மாநாடு 2010ஐ நடத்துவதில் அவரது உழைப்பை அளவிடவே முடியாது. அதனால் தான் என்னவோ நூறாண்டுகளில் செய்ய வேண்டிய வேலையைச் செய்த திருப்தியில் நம்மைவிட்டு சென்று விட்டாரோ?

ஆண்டோ பீட்டரைப் பற்றியும் அவரது மென்பொருட்கள்/புத்தகங்கள்/படைப்புகளைப் பற்றியும் அடிக்கடி செய்திகளில் வந்துக் கொண்டே இருக்கும், அது அவருக்கு பிடிக்கும் என நினைக்கிறேன். ஆனால் ஹிந்து நாளிதழிலும் பிபிசியிலும் அவரது இரங்கல் செய்தி தான் வர வேண்டுமா?, என்ன கொடுமை!.

நான் சில முறை தமிழ் தொலைக்காட்சிகளில் வந்து இருக்கிறேன் என்றால் அதற்கு முழுக்காரணம் ஆண்டோ தான். ஆண்டோ பிறருக்கு உதவுவதில் மகிழ்பவர், ஓடிக் கொண்டே இருப்பார் எனச் சொல்லி கொண்டே போகலாம், ஆனால் இதற்கு மேல் என்னால் எழுத முடியவில்லை, என் மனதிற்கு அந்த வலுவில்லை.

அவரது அத்மா சாந்தி அடைய நாம் பிராத்திப்போம்.

Antopeter Book Release1 Director BaluMahendra
(Seen above in 2007 during release of a book written by Anto Peter)

Categorized in:

Tagged in:

,