இரண்டு நாட்களாகப் பலரும் சாட்ஜிபிடி (ChatGPT) வரைந்த அவர்களது படங்களைப் பகிர்கிறார்கள். இது ஏதோ புதிதாக வந்திருக்கும் வசதி இல்லை, ஏற்கனவே சாட்ஜிபிடி செய்து வரும் வேலைதான்.

தற்போது சில மாதங்களாக கூகுள் ஜெமினி, சாட்ஜிபிடியை விடச் சிறப்பாக இருப்பதால், ஓபன்-ஏ.ஐ. (OpenAI) நிறுவனத்திற்குக் கடும் போட்டியைச் சமாளிக்க வேண்டி வந்துள்ளது. இதனால் அவர்களே அவ்வப்போது இந்த மாதிரிப் புதிய போக்குநிலைகளைக் (Trends) கிளப்பி விடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

போன ஆண்டு ‘ஸ்டுடியோ கிப்லி’ (Studio Ghibli) முறையில் படங்களைப் பகிர்வதை வைரல் ஆக்கினார்கள். அதன் பிறகு ‘விளையாட்டுப் பொம்மை போன்ற உருவங்கள்’ (Toy-like action figures) படங்கள் பிரபலமானது. இப்போது பிப்ரவரி 2026-இல் இந்த ‘எனது முந்தைய அரட்டைகளைக் கொண்டு வரையப்படும் நையாண்டிப் படங்கள்’ (Chat History Caricature) என்று வரையச் சொல்லிப் பகிர்வது வைரலாகி வருகிறது. இதெல்லாமே ஒரு மார்க்கெட்டிங்தான்.

இதில் புதுமை எதுவும் இல்லையென்றாலும், ஏன் நான் இன்னும் எனது படத்தைப் பகிரவில்லை என்று பலரும் கேட்பதால் (இருவர் கேட்டாலும் அதுவும் பன்மைதானே!), இதோ எனது தற்படம்.

Who is Venkatarangan Thirumalai?
Who is Venkatarangan Thirumalai?

நானும் ஜோதியில் ஐக்கியமாகிவிட்டதால், இனி என்னை ஓபன்-ஏ.ஐ. நிறுவனத்தின் மாதிரிகள் கோபித்துக் கொள்ளாது என்று நினைக்கிறேன்.
எனது நண்பர்களுக்கு ஒரு கேள்வி: கையில் அந்தப் பித்தளை டபரா காபி, ‘பவுண்டர் கேட்டலிஸ்ட்’ (Founder Catalyst) சட்டை, மேசையில் இருக்கும் ‘Clarity in Business’ புத்தகங்கள் என இந்தப் படத்தில் இருக்கும் விஷயங்கள் என்னை உண்மையாகவே படம் பிடித்திருக்கிறதா?


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading