அனைவருக்கும் வணக்கம்!

இன்றைய மெட்ராஸ் பேப்பர் இணைய வார இதழில், எனது ‘செயலிகளின் கதை’ (Stories behind successful apps) தொடரின் 52ஆவது கட்டுரை வெளிவந்துள்ளது. 2024ஆம் ஆண்டு, நவம்பர் 28 அன்று வாட்ஸ்-ஆப் செயலியின் உருவாக்கக் கதையுடன் தொடங்கிய இந்தத் தொடர் இன்றோடு நிறைவுபெறுகிறது.

இந்தத் தொடருக்கான ஆராய்ச்சிப் பணி மிகவும் சவாலாக இருந்தது, அதைப்பற்றி விரைவில் தனியாகப் பேசுகிறேன்.

‘செயலிகளின் கதை’ விரைவில் நூலாக!

இந்தத் தொடர் விரைவில் நூலாக வரவிருக்கிறது. நூலுக்கான அதிகாரப்பூர்வத் தலைப்பு இன்னும் வைக்கப்படவில்லை; எழுத்தாளர் திரு. பா.ரா. அவர்களின் வழிகாட்டுதலுக்குக் காத்திருக்கிறேன்.

பதிப்பகத்தாருடன் கலந்தாலோசனை செய்தபின், நூலின் வெளியீட்டு விவரங்களை விரைவில் இங்கே பகிர்கிறேன். தொடருக்குக் கொடுத்த உங்கள் ஆதரவை, நூலுக்கும் அளிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

❤️ மனமார்ந்த நன்றி!

இந்தத் தொடரின் வெற்றிக்குக் காரணமாக இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி:

என்னைத் தமிழில் புத்தகங்களை எழுதத் தூண்டிய எனது நண்பர், ஆசிரியர் திரு. பா. ராகவன் அவர்களுக்கு.

இந்தத் தொடரைச் சிறப்பாகத் தொகுத்து, எழுத்துப் பிழைகளைக் களைந்து செம்மைப்படுத்திய திரு கோகிலா, திரு பாலாஜி மற்றும் மெட்ராஸ் பேப்பரின் அனைத்து ஆசிரியர்களுக்கும்.

இது எனது மூன்றாவது நூல்!

இது எனது மூன்றாவது நூல் என்பதை நினைத்துப் பார்க்க எனக்கே வியப்பாக உள்ளது.

நுட்பம்: எனது முதல் தமிழ் நூல். டிசம்பர் 2023இல் மெட்ராஸ் பேப்பர் மற்றும் ஜீரோ டிகிரி தயாரிப்பில் வெளிவந்தது. இது, எந்த வல்லுநரின் உதவியும் இன்றி, உங்கள் செல்பேசி மற்றும் கணினியைத் திறமையாகப் பயன்படுத்த உதவும் கையேடு.

The Founder Catalyst (“தி ஃபௌண்டர் காடலிஸ்ட்”): எனது ஆங்கில நூல். ஜூலை 2025இல் கிழக்கு பதிப்பகத்தின் ஆக்ஸிஜன் புக்ஸ் மூலம் வெளிவந்தது. இது நிறுவனர்களை ஊக்கப்படுத்த உதவும் உண்மையான பாடங்களைக் கொண்ட நூல்.

எனது இரண்டு நூல்களுமே அமேசான் இணையக் கடையில் கிடைக்கிறது.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

2 thought on “செயலிகளின் கதை: 52 வாரப் பயணம் நிறைவு!”
  1. செயலிகளின் கதை – நூலுக்கு வாழ்த்துகள்!! on book if you could how it is selected as successful app based on revenue or users or any other criteria would be help too. Thanks!

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading