இந்தளவு முட்டாள்தனமான தப்பை இப்போது இருக்கும் நவீன இயற்றறிவு மாதிரிகள் செய்யாது என நினைத்தேன். ஆனால் முயற்சி செய்து பார்த்த போது பாரதப் பிரதமர் திரு மோடி, 2025 பாரிஸ் மாநாட்டில் சரியான ஓர் உதாரணத்தைத் தான் சொல்லியிருக்கிறார் என்று தெரிந்தது.
இரண்டொரு நாட்களுக்கு முன்னர், பாரிஸில் நடந்த செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் தனது உரையில் அவர் சொன்னது “செயற்கை நுண்ணறிவு பல விசயங்களைச் சிறப்பாக , குறிப்பாகக் கடினமான விவரங்களை எளிமைப் படுத்திக் கொடுக்கிறது. இருந்தாலும் ஒருவர் தனது இடது கையால் வரைகிறார் என்று ஒரு படத்தைக் கேட்டால், அது வலது கை பழக்கம் உடையவரை விடையாகக் கொடுக்கிறது”.
இதைச் சோதிக்கும் நோக்கில், நான் சாட்-ஜிபிடி (ChatGPT) மற்றும் ப்ளக்ஸ் 1.1 அல்ட்ரா (Flex 1.1 Ultra) இலவச மாதிரிகளில் அதே கேள்வியை (prompt) கேட்டேன். பிரதமர் சொன்னது போலவே, இந்த மாதிரிகள் தவறான விடையையே தந்தன. கீழே உள்ள படங்களைப் பார்த்தால் இது தெளிவாகத் தெரியும்.

![Generated by FLUX 1.1 [pro] Ultra and Gemini 2.0 Pro in ChatLLM.](https://venkatarangan.com/wp-content/uploads/2025/02/flux-left-hand-drawing.jpg)
மிக அடிப்படையான, எளிமையான உதாரணம் இது. இந்தத் துறையில் இருக்கும் பலருக்கும் இது மாதிரி பல ஆயிரம் இடங்களில் செயற்கை நுண்ணறிவு தடுமாறுவது தெரியும். இருந்தாலும், இந்த மாதிரிகளை நம்முடைய பொறியாளர்கள் எந்தளவு புரிந்து கொண்டு இருக்கிறார்கள் என்று இது காட்டும் என்பது எனது கருத்து. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

