கூகுள் படக்கதை

நம்மில் பலரும் கூகுள் போட்டோஸ் செயலியில் நமது வாழ்வின் பொக்கிஷமான படங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்போம். இந்தச் செயலியின் கதை ‘விழுந்த இடத்திலிருந்து எழுவது’ சாத்தியமே என்பதை நிரூபிக்கும் இரண்டு உதாரணங்களைக் கொண்டது என்றால் நம்ப முடிகிறதா?

இதில் முதலாவதைச் செய்தவர் கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளியினரான அனில் சபர்வால் (Anil Sabharwal).

இரண்டாவதைச் செய்தவர் டேவிட் லீப் (David Lieb). இவரின் கதை வித்தியாசமானது. மனிதர் படிப்புக்கும் வேலைக்கும் மாறி மாறி இறுதியில் பெரியதாகச் சாதித்தவர். இவர் முதலில் படித்தது மின்சாரம் மற்றும் கணினிப் பொறியியல். அடுத்தது ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவு துறையில் முனைவர் பட்டப்படிப்பில் சேர்ந்த வேகத்தில் வெளிவந்தார். அடுத்து வேலைக்குச் சேர்ந்தவர், சில ஆண்டுகளில் மீண்டும் படிக்க சிகாகோ பல்கலைக்கழக மேலாண்மை பட்டயப்படிப்பில் (எம்.பி.ஏ.) சேர்ந்தார். அங்கே போனவுடன் ஒரு வளர் தொழிலுக்கான யோசனை வர, அந்தப் படிப்பையும் விட்டு சுயத்தொழிலுக்கு வந்தார்.

கூகுள் போட்டோஸ்ஸில் இவர்கள் இருவரின் பங்கு என்ன? தெரிந்து கொள்ள இந்த வார மெட்ராஸ் பேப்பரில் என் கட்டுரையைப் படிக்கவும்.

#MadrasPaper #GooglePhotos #TamilArticle #AppStories


Discover more from Mangoidiots.com

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading