
Valiyavan (2015)
விஜயா ஃபாரம் மாலில் மானேஜராக வருகிறார் ஜெய், வாலாஜா ரோடு சுரங்கபாதையில் செல்லும் போது எதிரில் திடிரென வந்து “I Love You” எனச் சொல்லி செல்கிறார் ஆண்டிரியா. அவரை ஜெய் தேடி அலைய, இவரின் வீட்டிற்கு, மாலிற்க்கு இவர் இல்லாதப் போது வந்து செல்கிறார் ஆண்டிரியா. பின்னர் காதலிக்க அவரின் காரணத்தை சொல்கிறார், பிறகு இது வேறும் விளையாட்டு என்கிறார், அதன் பின் இந்திய ஒலிம்பிக் குத்து சண்டை வீரர் ஆர்ஜூனை நீ ஆடித்துவிட்டு வா, அதற்கு ஜெய் தயங்குகிறார். சீ சீ போ போ என்கிறார் ஆண்டிரியா, நமக்கு “எங்கேயும் எப்போதும்” அஞ்சலி எங்கேடா இந்த படத்தில் வந்தார் என குழம்பி கொண்டு இருந்தால், அதற்குள் நான்கே மாதத்தில் ஜெய் குத்துசண்டை பயின்று, ஒலிம்பிக் வீரரை அடித்துவிடுகிறார். அவரை அடிக்க சொன்ன காரணம் என ஆண்டிரியா ஒன்றை சொல்கிறார், என் பத்து வயது பையன் அவன் பக்கத்தில் இருக்கும் பையனை அடிக்க சொல்லும் காரணம் கூட இதைவிட கனமாக இருக்கும்.
ஜெய்யின் அம்மாவாக வரும் “அனுபமா குமார்” யதார்தமாக செய்துள்ளார், ஜெய் குடித்துவிட்டு மன்னிப்பு கேட்கும் காட்சியில் அம்மாவாக அவர் “முதல் முறைதானே பரவாயில்லை” என சொல்வது ரசிக்க முடிகிறது. ஜெய்யின் அப்பாவாக “அழகம் பெருமாள்” அவருக்கு நடிக்க ஒரே ஒரு காட்சி தான், வயதனவராக வரும் அவர் ஏன் தனியார் வங்கியில் இன்னும் அலுவலராகவே காட்டப்பட்டுள்ளார் என புரியவில்லை. அதே வேலை செய்யும் ஆண்டிரியாவிற்கு Skoda கார் எப்படி என்றெல்லாம் நான் கேட்க எண்ணி கேட்க முடியவில்லை. ஒரு காட்சியில், ஒட்டலில் ஒரு மேஜையில் ஆண்டிரியா, ஜெய் பேசுகிறார்கள், பின்னே உள்ளவர்கள் எழுந்து செல்கிறார்கள்; எனக்கு தான் அந்தக் காட்சியில் மிக வருத்தம், என்னால் எழுந்துச் செல்ல முடியவில்லையே என்று!. பல படங்களில் கதை என்று ஒன்றுமே இருக்காது, வலியவன் (2015) படத்தில் அதற்கான முயற்சிக்கூட இயக்குனர் செய்யவில்லை, தினம் படத்தலத்தில் அன்றைக்கு தோன்றியதை எடுத்துள்ளார் போல வந்துள்ளது. டி.இமானின் இசையில் “ஆஹா காதல் என்னை அடிச்சு துவைக்க” பாடல் நம் மனத்தை கவர்கிறது.


