ஸ்டாலின் – “மூத்த பத்திரிகையாளர் பார்வையில்” என்ற இந்தப் புத்தகத்தை எழுத்தாளர் சோலை அவர்கள் எழுதி, விகடன் பிரசுரம் சில மாதங்கள் முன்பு வெளியிட்டது. வடக்கு உஸ்மான் ரோடு ’நியு புக் லாண்டில்’ சொல்லி வைத்து, பிரதிகள் மீண்டும் வந்தவுடன் அழைத்தார்கள், சில வாரங்கள் முன்பு வாங்கினேன்.

நான் எழுத்தாளர் சோலையின் முந்தைய படைப்புகளைப் படித்ததில்லை. ஸ்டாலினைப் பற்றியும் அதிகம் அறிந்திருக்கவில்லை – அதற்காக மற்ற அரசியல்வாதிகளை பற்றி தெரியும் என்று இல்லை, பலரைப் பற்றியும் எனக்கு தெரியாது என்பது தான் உண்மை :-). என் வாசிப்பு எல்லாம் கணினி, பயணம், நிர்வாகம், நகைச்சுவை மற்றும் பொது தலைப்பு புத்தகங்கள் தான்.  ஸ்டாலினைப் பற்றி  எனக்கு தெரிந்தது எல்லாம் அவர் கலைஞர் திரு.கருணாநிதி அவர்களின் மகன்,  துணை முதல்வர், சென்னையின் முன்னாள் மேயர் மற்றும் “மிசா”வில் சிறைக்கு சென்றவர் என்பது மட்டும் தான். அதனால் எந்த வித பெரிய எதிர்ப்பார்பும் இல்லாமல் இந்தப் புத்தகத்தை இன்று வாசித்து முடித்தேன்.

புத்தகத்தைப் பற்றிய என் கருத்துக்கள் இதோ:

  • என் போன்ற இன்றைய இளைஞர்களுக்கு இன்று உள்ள / மறைந்த அரசியல்வாதிகளைப் பற்றி அவர்களின் வளர்ச்சிப் பாதைகள் பற்றி தெரியாது. அவர்களுக்கு ’மிசா’ கொடுமைகளை தெரிந்துக் கொள்ள, அது அடுத்த வந்த பல ஆண்டுகளில் எப்படி தமிழக அரசியலை பாதித்து என்பது பற்றி சிறிது தெரிந்துக் கொள்ள் இந்த புத்தகம் ஒரு முன்னுரை
  • 180 பக்கப் புத்தகத்தில் 100 பக்கங்கள் ’மிசா’ சிறை கொடுமைகளைப் பற்றியே ஆசிரியர் எழுதுகிறார், அது முக்கியமான ஒன்று தான் ஆனாலும் மற்றதை சொல்ல அதனால் விடுபட்டுவிட்டதோ என்று தோன்றுகிறது
  • ஸ்டாலின் அவர்களின் சிறை அனுபவங்களையே முழுவதும் எழுதிவிட்டதால் அவரின் பள்ளி பருவம், படிப்பு, நண்பர்கள், அவரின் நேரடி பேட்டிகள் இவை இடம் பெறவில்லை
  • நடுநிலையாக இல்லாமல் ஒரு கட்சியின் சார்பாகவே பெருவாரியான பகுதிகளை எழுதியுள்ளார் ஆசிரியர், அதனால் பல இடங்கள் நமக்கு திகட்டுகிறது
  • சுருக்கமாக சொன்னால், ஆசிரியர் இன்னும் கடினமாக ஆராய்ச்சி செய்து எழுதியிருந்தால் வாசகர்களுக்கு ஒரு நல்ல புத்தகம் கிடைத்து இருக்கும்!

Categorized in:

Tagged in:

,