ரொம்ப நாட்களாகப் பார்க்க நினைத்து, எங்கள் கிளப்பில் (TNCA Club) நேற்று திரையிட்டதால் பார்த்தப் படம் அபியும் நானும். ”மொழி” படத்தின் இயக்குனர் ராதாமோகன் (Radha Mohan) அவர்களின் படமிது என்பதால் எனக்கும் என் மனைவிக்கும் இந்தப் படத்திற்கு நிறைய எதிர்ப்பாப்பு.

ஆங்காங்கே கொஞ்சம் ”சந்தோஷ் சுப்ரமண்யம்”  படத்தையும் ”கண்ணாமூச்சி ஏனடா” படத்தையும் நினைக்க வைத்தாலும் ஒரு பாசமான அப்பாவைப் பற்றி ஒரு நல்ல படத்தைக் கொடுத்துள்ளார் ராதாமோகன். இந்த மாதிரி ஒரு கதையம்சமுள்ள படத்தை தைரியமாக தயாரித்த பிரகாஷ்ராஜ் (Prakash Raj) அவர்களை எவ்வளவுப் பாராட்டினாலும் தகும்.

படத்தில் வரும் ஒவ்வொரு நடிகரும் பாத்திரத்திற்கு ஏற்ற தேர்வு – த்ரிஷா (Trisha),  பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா (Aishwarya), கணேஷ் வெங்கட்ராமன் (Ganesh Venkatraman) – ஜோகிந்தர் சிங், இளங்கோ குமரவேல் (Elango Kumaravel) என அனைவரும் கணக்கச்சிதமாக பொருந்துகிறார்கள். அந்த இரண்டு வெள்ளைக்கட்டி கொழு கொழு சிறுவர்களும் கூட!

அபியும் நானும்

அபியும் நானும்

Categorized in:

Tagged in:

, ,